புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபலம் யாருன்னு தெரியுமா..? தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்….

இப்போதெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்றால் சினிமாவில் நடிக்க வேண்டியது இல்லை. அரசியலில் சேர வேண்டியது இல்லை. ஒரே ஒரு ஆண்ட்ராய்டு போன் மட்டும் இருந்தால் போதும்.

திறமை இருந்தால், பேச தெரிந்தால், நடிக்கத் தெரிந்தால், மற்றவர்கள் ரசிக்கும்படி அதை செய்தால் அடுத்த சில தினங்களில் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் செலிபரட்டி என்ற புகழ் கிடைத்து விடும்.

ஜிபி முத்து

அப்படிதான் டிக்டாக் செயலி இருந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜிபி முத்து. இவரது முழு பெயர் ஜி பேச்சிமுத்து.

அடேய் பேப்பர் ஐடி. நாறப் பயலே, மூஞ்சியும் மொகரையும் பாரு, ஏலே கொஞ்சமாச்சும் அறிவிருக்கா லே, இப்படியா கமெண்ட் பண்றது,

வெக்கங்கெட்ட ஆளுக, ஆக்கங் கெட்ட கூவ என அவர் கோபத்தில் பேசும் டயலாக் தான் அவரது அடையாளம்.

முதலில் அவர் பாடல்களுக்கு நடனமாடியும், முக்கிய நடிகர்களின் வசனங்களை பேசியும்தான் நடித்துக்கொண்டு இருந்தார்.

நாறப்பயலே… செத்தப்பயலே…

அவர்களுக்கு ரசிகர்கள் அதிகரித்த நிலையில், பேப்பர் ஐடி களாக வந்த சிலர், அவரை கொச்சையாக வர்ணிப்பதும், அவரை கேவலமாக கமெண்ட் செய்வதும் அவரை ஆவேசப்படுத்தியது.

அவர்களுக்கு பதிலளிக்க அவர் போட்ட ஆத்திரமான, ஆவேச பதிவுகளும், அவர் பேசிய அந்த நாறப் பயலே, செத்தப் பயலே போன்ற தூத்துக்குடி மொழி வட்டாரத்தில் அவரது பேசுகிற தொனியும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தந்து விட்டது.

கடந்த 2022ல் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். முதல் ஆளாக வீட்டுக்குள் சென்ற அவரை, கமல்ஹாசன் பயங்கரமாக கலாய்த்தார்.

மிரட்டிய கமல் …

மற்ற போட்டியாளர்கள் எல்லாம் நாளைக்கு தான் வருவார்கள். இன்று இரவு முழுவதும் நீங்கள் மட்டும்தான் இந்த வீட்டுக்குள் தனியாக இருக்கணும். அதுதான் உங்களுக்கு முதல் டாஸ்க் என கமல் விளையாட்டாக மிரட்டினார்.

அதை நம்பி அரண்டுபோன ஜிபி முத்து, அய்யய்யோ, இப்பவே கதவை திறந்து என்னை வெளியில விட்டுடுங்க… இப்பவே ஒண்ணுக்கு வருது, தனியா இந்த வீட்டுக்குள்ள நான் மட்டும் தங்கினா செத்து போயிடுவேன் என்று கமலிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்.

அதன்பிறகு சில படங்களிலும் இப்போது நடித்து வருகிறார் ஜிபி முத்து. நல்ல காமெடி நடிகராக அவர் வளருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கின்றன.

சமீபத்தில் புதிய கார் வாங்கியுள்ள அவர், செல்லும் இடங்களில் எல்லாம் காருடன் நின்று வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார்.

இளம் வயது புகைப்படங்கள்…

இதற்கிடையே ஜி.பி முத்துவின் இளம் வயது புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஏலே, இது யாருன்னு தெரியுதாலே… என்று அவர் பேசுகிற தொனியில் இதற்கு கேப்சன் வைக்கப்பட்டுள்ளது.

அட இது நம்ம நாறப்பயலே, செத்தப் பயலே ஜிபி முத்துதானே? என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version