“இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள வேர்க்கடலை சட்னி..!” – இப்படி அரைச்சா இட்லியே மிஞ்சாது..!!

உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை கொடுக்கக்கூடிய வேர்கடலை ஆனது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய முக்கிய பொருளாக உள்ளது. இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அழிப்பதோடு மனிதனின் ஆயுளையும் நீடிக்க கூடிய அபார சக்தி படைத்தது.

நமது தேசத்தந்தையான காந்தி தாத்தா கூட வேர்க்கடலையும், ஆட்டுப்பாலையும் சாப்பிட்டு தான் அவ்வளவு நாள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருந்தார் என்று நமது பெரியவர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட சத்துமிகு வேர்கடலையிலிருந்து எப்படி சட்னி அரைக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

வேர்க்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்

1.வேர்க்கடலை 100 கிராம்

2.வரமிளகாய் 3

3.சுண்டைக்காய் அளவு புளி

4.தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் வேர்கடலையை வாணலியில் போட்டு அடுப்பை பத்தவைத்து இளம் தீயில் நன்கு வறுக்க வேண்டும். அவ்வாறு வறுக்கும் போது வேர்கடலை கருகி போகக்கூடாது.

 எனவே பக்குவமாக நீங்கள் ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடம் வரை அதை இளந்தீயில் வறுத்து எடுத்து தனியாக போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வேர்கடலை சூடு ஆறிய பிறகு அதன் இருக்கும் தோலை நீக்கிவிட்டு அதனோடு சிறிதளவு உப்பு, புளி வரமிளகாய் இவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு விடுங்கள்.

மிக்ஸியில் போட்டு இருக்கும் எந்த பொருளை முதலில் லேசாக அரைத்து விட்டு பிறகு சிறிதளவு நீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது சுவையான வேர்கடலை சட்னி தயாராக உள்ளது. இதை ஒரு பவுலின் மாற்றிக்கொள்ளுங்கள். இதற்கு தாளிசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தேவையென்றால் பச்சை மிளகாயை அப்படியே கிள்ளி போட்டு விடுங்கள் சுவையும் மனமும் தூக்கலாக இருக்கும்.

 இப்படி நீங்கள் சட்னி செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் செய்யும் இட்லியும், தோசையும் நொடியில் காலியாகும். இருந்த இடமே தெரியாது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …