பாய்ஸ் படத்துல நடிச்சிருக்க வேண்டியது நான் தான்.. ஆனால்.. புலம்பி தள்ளும் பிரபலம்..!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கடந்த 2003ம் ஆண்டில் வெளியான படம் பாய்ஸ். இந்த படம் டீன் ஏஜ் பருவத்தை மையப்படுத்திய கதையாக இருந்தது.

அந்த இளம் வயதில் ஏற்படும் காதல் சார்ந்த விஷயங்களை இந்த படம் பேசியிருந்தது.

சித்தார்த்

இந்த படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஜெனிலியாக நடித்திருந்தார். அவர்களது நண்பர்களாக பரத், தமன், நகுல், மணிகண்டன் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஏஆர் ரகுமான் இசையின் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆயின. இதில் மங்களம் சார் என்ற கேரக்டரில் விவேக் நடித்திருப்பார்.

அன்னவெறி கண்ணையன் என்ற கேரக்டரில், கோவில் பண்டார சாமியாக செந்தில் நடித்திருப்பார்.

மிடில் கிளாஸ் குடும்பம்

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த, அதாவது ஓட்டல் பணிசெய்யும் ஊழியர் மகன் சித்தார்த், பணக்கார வீட்டுப் பெண் ஜெனிலியாவை காதலிப்பார்.

அவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோருமே எதிர்ப்பு தெரிவிக்க, விவேக் உதவியுடன் அவர்கள் திருமணம் நடக்கும்.

இந்த சம்பவத்தால், பிரண்ட்ஸ் உடன் வீட்டை விட்டு வெளியேறும் பிரண்ட்ஸ் சந்திக்கும் பிரச்னைகள், இசையில் சாதிக்கும் அவர்களது முயற்சிகள்தான் படத்தில் ஹைலைட்.

செக்ஸ் படம் போல…

இந்த படத்தில் வழக்கத்தை விட சில அந்தரங்க விஷயங்கள் தூக்கலாக பேசப்பட்டதால், துவக்கத்தில் இதை செக்ஸ் படம்போல ரசிகர்கள் விமர்சிக்க துவங்கி விட்டனர்.

இதனால் படம் வந்த புதிதில் பாய்ஸ் படத்தை பலரும் வரவேற்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ஷங்கர் சொன்ன மையக்கருத்தை ஒரு தரப்பு ரசிகர்கள் புரிந்துக்கொண்டதால், இப்போது டீன் ஏஜ் வயதினர் பலரும் இந்த படத்தை விரும்பி பார்க்கின்றனர்.

பாய்ஸ் நடிகர்கள்

இந்த படத்தில் நடித்த சித்தார்த், பரத், நகுல் ஆகிய மூன்று பேருமே தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஜெனிலியாவும் பல படங்களில் நடித்து விட்டார். தமன், தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக இருக்கிறார்.

பாய்ஸ் படத்தில் நடித்தவர்களில் மணிகண்டன் மட்டுமே, இப்போது பெரிய அளவில் பேசப்படாத நிலையில் இருக்கிறார். அவருக்கும் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்திருந்தால் பேசப்பட்டு இருப்பார்.

ஷங்கரை சந்தித்தேன்..

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறுகையில், அந்நியன் படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவுக்காக சென்ற போது ஷங்கரை சந்தித்தேன்.

அப்போதுதான் அவர், பாய்ஸ் படத்தில் அந்த 5 பேரில் ஒரு கேரக்டரில் உங்களை நடிக்க வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் உங்களை அப்போது தொடர்பு கொள்ள முடியவில்லை, என்றார்.

பிளஸ் 2 படித்துக்கொண்டு இருந்தேன்

ஆனால் அப்போது நான் ஸ்கூலில் பிளஸ் 2 படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது நான் அவர் படத்தில் நடித்திருந்தால், அது வேற லெவலில் இருந்திருக்கும், என்று கூறியிருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

அதன்பிறகு வெயில் என்ற படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார். இது இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு படத்தில் நடிக்கவும் ஆரம்பித்து இதுவரை 24 படங்களில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாய்ஸ் படத்துல நடிச்சிருக்க வேண்டியது நான் தான்.. ஆனால் மிஸ் ஆகி விட்டது என்று இப்போது புலம்பி தள்ளுகிறார் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version