தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் தற்போது கதாநாயகனாக பல படங்களில் கலக்கி வருகிறார். மேலும் இவரது படத்திற்கு அதிக அளவு ரசிகர்களின் ஆதரவு இருப்பதாலும் நல்ல வரவேற்பு இருப்பதாலும் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்து இவர் நடித்து வருகிறார்.
இப்போது இவர் ராம் பாலா இயக்கத்தில் வெளி வர உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் இவருக்கு பிரபல வில்லனாக ஒரு காமெடி நடிகர் நடிக்க உள்ளார் என்பது தான் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதுமே காமெடியில் கலக்கி வரும் அந்த நடிகர் முதல் முறையாக வில்லனாக நடிக்க இருப்பதால் அனைவரும் அவரது நடிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நடிகர் வேறு யாருமில்லை வைகைப்புயல் வடிவேலு தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. மேலும் ரெட் கார்டை நீக்கிய பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் வடிவேலு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இவர் சுராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிக்கிறார் .மேலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துவரும் சந்திரமுகி இரண்டு படத்தில் வடிவேல் நடித்த வருகிறார்.
அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு ஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாக நடிப்பு கிடைத்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாக உள்ளது.
காமெடி நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட வந்த வடிவேலு புதிய முயற்சி ஆக வில்லன் அவதாரம் எடுத்திருப்பதால் இது அவரது கேரியருக்கு ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை வில்லனாக சித்தரிக்க கூடிய புகைப்படங்களை வரைந்து இணையத்தையே கலக்கி வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.