ஜீவி பிரகாஷ் விவாகரத்துக்கு இந்த நடிகை தான் காரணமா..? பகீர் கிளப்பும் பிரபலம்..!

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகனாகிய ஜீவி பிரகாஷ் பள்ளி பருவத்தில் இருந்தே தான் காதலித்த பிரபல பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிவதாக இணையங்களில் செய்திகள் வந்து பரபரப்பானது.

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்..

பொதுவாகவே திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொள்ளக்கூடிய நட்சத்திர தம்பதிகள் ஏதாவது ஒரு கட்டத்தில் அவர்களது காதல் கசந்து போக விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வகையில் நட்சத்திர ஜோடிகளாக ஜொலித்த ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடியின் ஒற்றுமையான வாழ்க்கையினை பார்த்து யார் கண் பட்டதோ தெரியவில்லை. தற்போது இந்த ஜோடியும் விவாகரத்தை நோக்கி சென்று விட்ட செய்தி இணையத்தில் இடியாய் விழுந்தது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் மீளாத துயரத்தில் இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் பிரிவு குறித்து அறிவிக்கும் போது இவர்களது வளர்ச்சி மற்றும் எதிர்கால நலனை முன்னிட்டு தான் தார்மீகமாக பிரிவதை அறிவித்த இவர்கள் தங்கள் குழந்தையை பற்றி நினைக்கவில்லையே என்று பெருவாரியான ரசிகர்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள்.

எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இவர்கள் பிரிவில் உறுதியாக இருந்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது.

விவாகரத்துக்கு காரணமான நடிகை..

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சபிதா ஜோசப், ஜீவி பிரகாஷ்க்கும், கயல் ஆனந்தியுடன் தொடர்பு உள்ளதாக பல்வேறு வகையான விமர்சனங்கள் மட்டுமல்லாமல் கிசுகிசுகளும் இணையங்களில் வேகமாக பரவியது.

இதற்கு காரணம் ஜீவி பிரகாஷ் மற்றும் கயல் ஆனந்தி இருவரும் இரண்டு மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்ததை அடுத்து இது போன்ற கிசுகிசுக்கள் வெளி வந்தது. எனினும் திரை உலகில் இது போல கிசுகிசுக்கள் வெளி வருவது இயற்கையான ஒன்று தான்.

அப்படி தொடர்ந்து வந்த கிசுகிசுக்களால் தான் ஜீவி பிரகாஷ், மனைவி சைந்தவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம். கடுமையாக அவர் மனதில் பல்வேறு எண்ணங்கள் உருண்டோடி இருக்கலாம்.

பகீர் கிளப்பிய பிரபலம்..

இதனை புரிந்து கொண்ட ஜீவி பிரகாஷ் தொடர்ந்து அவரோடும் இணைந்து நடிப்பதை தவிர்த்து இருக்கலாம் அல்லது தன் கணவர் அவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று கூட சைந்தவி நினைத்திருக்கலாம். இது எல்லா பெண்களுக்கும் உரிய இயல்பு தான்.

அந்த வகையில் ஜீவி பிரகாஷ் தமிழ் திராவிட அரசியல் மைண்ட் செட் கொண்டவர். எனினும் அவரது மாமியார் அப்படி இல்லை. அவருடைய குடும்பம் கூட படத்தில் இப்படி நடிக்க கூடாது என்று நெருக்கடி கொடுத்ததை அடுத்து இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு இருக்கலாம் என சபிதா ஜோசப் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறியுள்ளது. அத்தோடு கயல் ஆனந்தி தான் ஜீவி பிரகாஷின் விவாகரத்துக்கு காரணமா? என்ற ரீதியில் ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

எனினும் பல ரசிகர்களும் பிஞ்சு பெண் குழந்தைக்காக இவர்கள் இருவரும் விட்டுக் கொடுத்து சென்றிருந்தால் வாழ்க்கை இனிமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த குழந்தையின் எதிர்காலமும் நன்றாக இருந்திருக்குமே என்று அங்கலாயித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version