சினிமா துறையில் அடிக்கடி நட்சத்திர தம்பதிகள் பிரிவது என்பது வழக்கமாக நடந்து வருகிறது. அதுவும் பிரபலமான ஜோடிகள் பிரிவு என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விடுகிறது. சில நேரங்களில் அதிர்ச்சியும் ஏற்படுத்தி விடுகிறது.
ஏனெனில் சினிமாவில் ஹீரோவாக நடிப்பவர்கள், ஹீரோயினாக நடிப்பவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை, மற்றவர்களுக்கு வாழ்ந்து காட்டி நடிப்பில் புரிதலை தருபவர்கள், ஏன் அவ்வளவு சீக்கிரமாக தங்களது சொந்த வாழ்க்கையில் பிரிந்து அதிர்ச்சி தருகின்றனர்.
ஏன் இந்த நிரந்தர பிரிவு என்ற முடிவை நட்சத்திர தம்பதிகள் எடுக்கின்றனர் என்பது இதுவரை அறிய முடியாத ஒரு புதிதாக தான் இருந்து வருகிறது.
ஜிவி பிரகாஷ்குமார்
அந்த வகையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு இசையமைப்பாளராக, நடிகராக இருந்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன்தான் ஜி வி பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முறைப்படி சங்கீதம் கற்றவர். தனது இசை புலமையை வெளிப்படுத்தும் விதமாக, இயக்குனர் வசந்த பாலன் இயக்கிய வெயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை ஜிவி பிரகாஷூக்கு தேடி கொடுத்தது.
தொடர்ந்து ஹிட் படங்கள்
அதன்பிறகு அஜித் குமார், திரிஷா நடித்த கிரீடம் படம், வெற்றிமாறன் டைரக்ட் செய்த தனுஷ் நடித்த பொல்லாதவன் படம், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படங்களுக்கு இசையமைத்தார். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் நடித்த ஆயிரத்தில் ஒருவன், பிறகு ரஜினி நடித்த குசேலன், சிலம்பரசன் நடித்த காளை, விஜய் நடித்த தலைவா என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்.
இந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்களாக அமைந்தன. குறிப்பாக பாடல்கள் ஹிட் அடித்தன.
17 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய விருது
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா நடித்த சூரரைப் போற்று என்ற படத்திற்காக ஜி வி பிரகாஷ் ஜெ தேசிய விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சூரரைப் போற்று படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.
டார்லிங் அறிமுகம்
இதற்கிடையே கடந்த 2015ம் ஆண்டில் டார்லிங் என்ற படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜீவி பிரகாஷ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஜெயில், பேச்சுலர், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, செல்பி, பென்சில் சிவப்பு மஞ்சள் பச்சை, செம, நாச்சியார், டியர் என பல படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
பாடகி சைந்தவி
நடிகராக, இசையமைப்பாளராக தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறார் ஜிவி பிரகாஷ், இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்த நட்சத்திர தம்பதிக்கு அன்வி என்கிற பெண் குழந்தை பிறந்தது.
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சேர்ந்து நிறைய காதல் பாடல்களை பாடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிந்து வாழ்கின்றனர்
இந்நிலையில் ஜிவி பிரகாஷூக்கும், சைந்தவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது.
வெகு விரைவில் மனைவியை பிரிகிறார் ஜி.வி.பிரகாஷ்.. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் பிரிவுக்கு காரணம் என்ற தகவலால், ரசிகர்களை ஷாக்கில் உள்ளனர்.