நான் கர்ப்பமாக இருக்கேன்ன்னு சொன்னப்போ.. ஜீவி பிரகாஷ் சொன்ன வார்த்தை.. ரகசியம் உடைத்த சைந்தவி..!

ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமானின் சகோதரி ஏ ஆர் ரெகானாவின் மகனாக 1987-இல் பிறந்த ஜீவி பிரகாஷ் திரையுலகில் இசை அமைப்பாளராக ஆரம்ப நாட்களில் வலம் வந்து பின்னர் படிப்படியாக கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து அந்தப் பள்ளியில் படித்த சைந்தவியை காதலித்ததை அடுத்து பெற்றோர்களது சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.

கர்ப்பமாக இருக்கேன்னு சொன்னப்ப..

இதனை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ இருப்பதாக அறிவித்திருக்கும் அறிவிப்பானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பரபரப்பாக பேசப்படக்கூடிய இவர்களது விவாகரத்து விஷயமானது இணையங்களில் பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் திருமணத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு அன்வி எனும் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை உண்டானதை அடுத்து தனது கணவரிடம் அந்த மகிழ்ச்சியான செய்தியை சொன்ன போது ஜீவி பிரகாஷ் அதை நம்பாதது குறித்து சைந்தவி தந்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி உள்ளது.

மேலும் தான் உண்டாகி இருப்பதை பற்றி தனது கணவரான ஜீவி பிரகாஷிடம் சொன்ன போது என்ன நடந்தது என்று அனுபவத்தை ஷேர் செய்வதை அடுத்து இந்த விஷயம் ட்ரெண்டிங் ஆன விஷயத்தில் ஒன்றாகி விட்டது.

பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் திருமணத்திற்கு பிறகு குழந்தை ஏதும் பெற்றுக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் தான் முதன் முறையாக கருவுற்ற செய்தியை ஜீவி பிரகாஷ் இடம் கூறினேன் எனக் கூறியிருக்கிறார்.

ஜீவி பிரகாஷ் சொன்ன வார்த்தை..

இதனைக் கேட்ட ஜீவி பிரகாஷிடம் எந்த ரியாக்ஷனையும் முதலில் என்னால் பார்க்க முடியவில்லை. எனது பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை காட்டி பாசிட்டிவாக வந்துள்ளது என்பதை ஜீ வி பிரகாஷிடம் கூறிய போது தூக்கத்தில் இருந்த அவர் இது என்ன தெர்மாமீட்டரா என கேட்டதோடு மட்டுமல்லாமல் பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்தி அசந்து தூங்கிவிட்டார்.

நானும் விடாமல் அந்த பிரக்னன்சி ஹிட் என்னுடையது. பேபி கன்ஃபார்ம் ஆகி உள்ளது என்று சொன்ன போதும் எதையும் காதில் வாங்காமல் தூங்குவதிலேயே நேரத்தை கடத்தினார்.

பின்னர் காலை எழுந்து வந்து காலங்காத்தாலே ஏதோ சொன்னயே கனவு மாறி இருந்தது மறுபடியும் சொல் என கூறினார்.

ரகசியத்தை உடைத்த சைந்தவி..

அப்போது மீண்டும் அந்த கிட்டை எடுத்துக்காட்டி காலையில் தான் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொன்னதை திரும்பச் சொல்லியும் அவர் நம்பவில்லை.

பின்னர் டாக்டரிடம் சென்று ஸ்கேன் செய்து அந்த ரிப்போர்ட்டை பார்த்த பின்பு தான் உன் வயித்துல நம்ம பாப்பா இருக்குன்னு ஹேப்பியானார் என்று சைந்தவி பேசினார்.

மேலும் குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாத அவர் பல மடங்கு சந்தோஷப்பட்டார்.

எப்போது வீட்டில் இருந்தாலும் அவர் மகளுடன் தான் விளையாடிக் கொண்டிருப்பார் என அந்த பேட்டியில் கூறி இருக்கும் இவர் தற்போது பிரிவு செல்ல முடிவு செய்து இருக்கும் வேளையில் அந்தப் பெண் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து பார்க்கவில்லையா? என்று பலரும் கேள்விகளை வைத்திருக்கிறார்கள்.

அத்தோடு பெண் குழந்தை என்பதால் அம்மாவின் அரவணைப்பில் இருப்பது தான் நல்லது என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து பிரிந்து வாழ்வதை விடுத்து இணைந்து வாழலாமே என சொல்லி வருகிறார்கள்.

எனினும் அவர்களது மன நிம்மதிக்காகவும், வாழ்க்கையை நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் பிரிவு ஒன்றே வழி என்ற முடிவினை இருவரும் எடுத்து விட்ட நிலையில் இவர்களது பிரிவு குறித்து பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version