சினிமா நட்சத்திரங்கள் பிரிவு என்பது, மிக சாதாரணமாக அடிக்கடி நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்கு, குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த விவகாரம் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவு
அதைத் தொடர்ந்து நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், அவரது மனைவி சைந்தவி இருவரும் விவாகரத்து செய்வதாகவும் நிரந்தரமாக பிரியப் போவதாகவும் அறிவித்திருப்பது பெரிய வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விரைவில் விவாகரத்து
கடந்த சில மாதங்களாக, ஜி வி பிரகாஷ், சைந்தவி இருவரும்பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாகவும் தகவல் பரவியது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில், அதுகுறித்த அறிவிப்பை இப்போது பகிர்ந்து உள்ளனர்.
அதில் நானும் சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின், நீண்ட யோசனைக்கு பிறகு ஒருவர் ஒருவர் பரஸ்பர மரியாதையுடன் எங்கள் மன அமைதிக்காகவும், மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
இந்த தருணத்தில் எங்கள் தனிமனித சுதந்திரத்தை புரிந்து கொண்டு, அதை மதித்து ஊடகங்கள் மற்றும் நண்பர்கள் ரசிகர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இதுதான் சிறந்த முடிவு
மேலும் எங்கள் இருவருக்கும் இதுதான் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்களது புரிதல் மற்றும் உ்ஙகளது ஆதரவு எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அவர்களது இந்த முடிவால், ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
எப்படி காதல் வந்தது என்றே தெரியாது
இந்நிலையில் அவர்கள் இருவரும் கலந்து கொண்ட பழைய நேர்காணல் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் ஜி வி பிரகாஷ் குமார் கூறுகையில், எனக்கும் சைந்தவிக்கும் எப்படி காதல் வந்தது என்றே தெரியாது. அவர் ஒரு நல்ல தோழி. மற்றவர்களை விட அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பத்தாவது படிக்கும் போதே இருவரும் பழகி வருகிறோம். அவரிடம் இருக்கும்போது மனசு ரிலாக்ஸாக, கம்பர்டபிளாக இருக்கும்.
எங்களுக்குள் இருக்கும் காதல் இதனால் தான் வந்தது, அதனால் தான் வந்தது என்று எதையும் சொல்லத் தேவையில்லை. எங்கள் காதல் அழகானது என்று கூறியுள்ளார்.
சைந்தவி கொடுத்த காதல் பரிசு
அதேபோல் சைந்தவி, எனக்கு பல பரிசுகளை கொடுத்திருக்காங்க. ஆனால் காதலைச் சொன்ன பிறகு, முதன்முதலாக காதலர் தினத்தில் ராம் சீதா திருமண ஓவியத்தை பரிசாக கொடுத்து அதை ஸ்டுடியோவில் வைத்துவிட்டு இது இங்குதான் இருக்கணும்னு சொன்னாங்க. அது இப்போதும் ஸ்டுடியோவில் தான் இருக்கு என்று இருவரும் அந்த பேட்டியில் தங்களது காதல் குறித்து அழகாக பேசி இருக்கிறார்கள்.
ரசிகர்கள் புலம்பல்
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், 11 வருட திருமண வாழ்க்கை இப்படி பிரிவு என்ற நிலைமைக்கு வந்து விட்டது என்று கூறி, தங்களது வருத்தங்களை பரிமாறி வருகின்றனர்.
சைந்தவி கொடுத்த முதல் காதல் பரிசு குறித்து ஜிவி பிரகாஷ்குமார் பேசியுள்ள பழைய வீடியோ பார்த்து பார்த்து புலம்பும் ரசிகர்கள், இவர்கள் ஏன் மனம் ஒத்துப் போய் மீண்டும் சேர்ந்து வாழக்கூடாது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.