GV Prakash இரண்டாம் திருமணம்..! மணப்பெண் யார்..? பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதிகள் கடந்த வாரம் பிரியப் போவதாக அறிவித்த அறிவிப்பை அடுத்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனை அடுத்து இணையத்தில் பேசும் பொருளாக மாறிய இந்த விவகாரம் எதனால் இவர்கள் பிரிய இருக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளை எழுப்பியதோடு சின்ன பெண் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது இவர்கள் இணைந்து வாழலாமே என்பது போன்ற கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றது.

ஜிவி பிரகாஷ் இரண்டாம் திருமணம்..

பள்ளியில் படித்து வரும் போதே காதலித்த ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி 2013 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.

தற்போது நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் திடீர் என பிரிந்து வாழ இருப்பதாக இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இந்நிலையில் ஜிவி பிரகாஷின் இசையில் பல பாடல்களை சைந்தவி பாடி இருக்கிறார். குறிப்பாக தனுஷ் நடித்த மயக்கம் என்ன என்ற திரைப்படத்தில் பிறை தேடும் இரவிலே உயிரே என்ற பாடலையும், அசுரன் படத்தில் வரும் எள்ளு வய பூக்கலையே என்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடிகள் திருமணம் ஆகி 11 ஆண்டுகள் கழிந்த பிறகு ஒருவரை ஒருவர் பரஸ்பரமாக விட்டு பிரிய முடிவு செய்து இருப்பதாகவும் இந்த தருணத்தில் ஊடகங்களும் நண்பர்களும் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற கவலையான செய்தியை வெளியிட்டார்கள்.

மணப்பெண் யார்?

இதனை அடுத்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்து இருக்கிறார். இந்த பேட்டியில் செய்தியாளர் ஜிவி பிரகாஷ் இரண்டாவது திருமணம் செய்கிறாரா? அல்லது மீண்டும் சைந்தவியோடு இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

எனக்கு பதில் அளித்த அவர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சிறு வயதுக்காரர்கள். எனவே இந்த பிரிவு தற்காலிகமாக இருக்கலாம். எனவே கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ சந்தர்ப்பம் உள்ளது.

இரண்டாவது திருமணம் என்பது ஜிவி பிரகாஷ் எடுக்க கூடிய முடிவு தான். அது அவர் கையில் மட்டும் தான் உள்ளது. இதனை காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

பிரபலம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..

இந்த தம்பதிகள் இருவருமே மனதளவில் காயப்பட்டு இருப்பார்கள். கட்டாயம் அவர்களுக்கு மன அமைதி இந்த சமயத்தில் நிச்சயமாக தேவை.

இவர்களின் பிரிவு இவர்களது உண்மையான அன்பை வெளிப்படுத்தும் எனவே மீண்டும் இணைய வாய்ப்புகள் உள்ளதாக சுபைர் எனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்த விஷயம் தான் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் இந்த ஜோடிகள் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு விரைவில் இவர்கள் இணைய வேண்டும் என்பதை மனப்பூர்வமாக பலரும் சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version