ஷங்கர் சொன்ன ஒரு வார்த்தை.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. பல நாள் ரகசியம் சொன்ன ஜி.வி பிரகாஷ்..!

இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ், வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து பெயர் வாங்கியவர். இப்போதும் மிக பிஸியாக இசையமைத்துக்கொண்டு இருக்கும் ஒரு இளம் இசையமைப்பாளர்.

ஜி.வி பிரகாஷ்

ஒரு கட்டத்தில், ஜி.வி பிரகாஷ் நடிகராகவும் மாறினார். இதுவரை 24 படங்களில் நடித்து, அதில் பல நல்ல வெற்றிப்படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார்.

அவரது தங்கை பவானிஸ்ரீ யும் ஒரு நடிகையாக, தமிழ் சினிமாவுக்கு கிடைத்து விட்டார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில், நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பது ஜி. வி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீதான்.

சிவப்பு மஞ்சள் பச்சை, அடியே, ஜெயில், குப்பத்து ராஜா, செம, பேச்சுலர், நாச்சியார், டார்லிங் போன்ற படங்களில் ஜி. வி பிரகாஷ் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. ஒரு நடிப்பு கலைஞராகவும் இசைக்கலைஞர் ஜி. வி பிரகாஷ் வெற்றி பெற்றுவிட்டார்.

விளம்பரங்களில் நடிப்பதில்லை…

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜி. வி பிரகாஷ் குமார், எனக்கு நிறைய விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. சூதாட்ட விளையாட்டுகள், குளிர்பான விளம்பரங்களில் நடிக்க அழைப்பு விடுத்தனர்.

பலகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக பலமுறை அழைத்தனர். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும், அதுபோன்ற விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டதாக அவரே சொல்லி இருந்தார்.

ஆனால், இயக்குநர் ஷங்கர் இயக்கிய ஒரு படத்தில் இசையமைப்பாளர் ஜி. வி பிரகாஷ்குமார் நடிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இதை இயக்குநர் ஷங்கரே ஒருமுறை, ஜீவி பிரகாஷிடம் நேரடியாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஒரு நேர்காணலில், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமாரே கூறியிருக்கிறார்.

பாய்ஸ் படத்தில்…

அந்நியன் படத்திற்காக பாடல் பாட சென்றபோது இயக்குனர் ஷங்கர் என்னை சந்தித்தார். அப்போது ஷங்கர் என்னிடம் பேசுகையில், பாய்ஸ் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது உன்னை தேடினேன். ஆனால், உன்னுடைய தொடர்பு எண் எனக்கு கிடைக்கவில்லை.

உன்னுடைய தொடர்பு எண் என்னிடம் இல்லை. அப்படி எண் இருந்திருந்தால் பாய்ஸ் படத்தில் நிச்சயமாக உனக்கு என்று ஒரு கதாபாத்திரம் இருந்திருக்கும். பாய்ஸ் என்ற அந்த ஐந்து பேரில் நீயும் ஒருவனாக நடித்திருப்பாய் எனக் கூறினார்.

தலை சுத்தி விட்டது

எனக்கு ஒரு நிமிடம் தலையை சுத்தி விட்டது என்று பல ஆண்டுகளுக்கு பின் இந்த ரகசியத்தை உடைத்து இருக்கிறார் ஜி.வி பிரகாஷ்.

ஒருவேளை ஜி.வி பிரகாஷ் பாய்ஸ் படத்தில் நடித்திருந்தால், அந்த ஐந்து பேரில் யாருடைய கதாபாத்திரத்தை வைத்து இருந்தால், இது பொருத்தமாக கொடுத்திருப்பார் என்று பார்க்கும்போது, அந்த இசையமைப்பாளர் கேரக்டர்தான் சரியாக அவருக்கு பொருந்தி இருக்கும்.

ஏனென்றால் அவர் இப்போதும் நிஜ வாழ்க்கையில் இசையமைப்பாளராக இருந்துவரும் தமன் தான் அவர்.

பாய்ஸ் படத்தில் உனக்கும் ஒரு கேரக்டர் கொடுத்திருப்பேன் என ஷங்கர் சொன்ன ஒரு வார்த்தையால், அந்த வாய்ப்பு மிஸ் ஆகி விட்டதே என்று ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு என்று பல நாள் ரகசியத்தை சொல்லி இருக்கிறார் ஜி.வி பிரகாஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version