36 முறை லிப்லாக்.. சலிக்காமல் ஜீவி பிரகாஷிற்கு சப்போர்ட் செய்த நடிகை.. விவகாரத்திற்கு பிறகு வெளியான ரகசியம்..!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக ஒரு காலகட்டத்தில் வலம் வந்து அதன் பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் ஹீரோவாக தனது அவதாரத்தை மாற்றிக்கொண்டவர் தான் “ஜிவி பிரகாஷ் குமார்”.

இவர் தனது மாமாவான ஏ ஆர் ரகுமான் உடன் சிறுவயதில் இருந்தே வளர்ந்து வளர்ந்ததால் அவரது இசைக்கருவிகளை தொட்டு விளையாடி அதன் மூலமாக இசையை கொஞ்சம் கொஞ்சமாக கற்று தெரிந்தார்.

ஏ ஆர் ரகுமான் உடன் ஜிவி பிரகாஷ்:

மேலும் தனது மாமா ஏ ஆர் ரகுமானின் வழிகாட்டுதலின்படி இசையமைக்க கற்றுக் கொண்டார். இவர் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த “வெயில்” திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து கிரீடம், பொல்லாதவன், சேவல் , அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், இரும்புக்கோட்டை ,முரட்டு சிங்கம் ,ஆடுகளம் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

மேலும் மயக்கம் என்ன, மும்பொழுதும் உன் கற்பனைகள் , எவனோ ஒருவன், குசேலன் , சகுனி, தாண்டவம் , அசுரன் , சூரரை போற்று உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்த பெருமை ஜி வி பிரகாசுக்கு இருக்கிறது.

இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்:

இவர் மிகப் சிறந்த இசையமைப்பாளராகவும், பாடகராகவும் பார்க்கப்பட்டு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வளர்ந்து வந்தார்.

இவரது பாடல்களும், இசையும் மிகப்பெரிய வெற்றி பெற காரணமாகவும் அமைந்தது. தமிழை தாண்டி தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து பிரபலமான இசை அமைப்பாளராக பார்க்கப்பட்டார் ஜி வி பிரகாஷ்.

இதனிடையே அவருக்கு நடிப்பின் மீது ஆசை வர குசேலன் திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து அறிமுகமாகி இருந்தார் .

அதை அடுத்து நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்து வந்த ஜிவி பிரகாஷ் குமார் ‘டார்லிங்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

ஹீரோவாக ஜிவி பிரகாஷ்:

அதை எடுத்த திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் உள்ள திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகராகவும் திகழ்ந்து வந்தார்.

இதனிடையே தனது பள்ளி தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷுக்கு அன்வி என்ற ஒரு நான்கு வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது.

இப்படியான சமயத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட அண்மையில் சைந்தவியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு பேர்ச்சியை கொடுத்தார்.

இந்நிலையில் இவர்களின் விவாகரத்துக்கான காரணம் என கூறி விதவிதமான ரகசிய விஷயங்கள் அம்பலமாக வருகிறது.

சைந்தவியுடன் விவாகரத்து:

அந்த வகையில் தற்போது ஒரு பேரதிர்ச்சி தரக் கூடிய விஷயம் கசிந்து இருக்கிறது. இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு அதற்கான காரணம் என்ன என்று பல ரகசிய விஷயங்கள் அம்பலமாகி வருகிறது.

ஆம், ஜிவி பிரகாஷ் பிரபல நடிகை ஒருவருடன் 36 முறை லிப் லாக் அடித்திருக்கிறார். இதுதான் அவர்களது விவாகரத்துக்கு பிள்ளையார் சுழியாக அமைந்ததாம்.

ஆம் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் நடிகை மனிஷா யாதவ் நடித்திருந்தார்.

36 முறை நடிகைக்கு லிப்லாக்:

அப்படத்தில் இருவரின் லிப் லாக் கொடுத்த காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த லிப் லாக் காட்சி சரியாக வர வேண்டும் என்ற காரணத்திற்காக ஜிவி பிரகாஷ் மொத்தம் 36 முறை டேக் எடுத்து மனிஷா யாதவ்விற்கு முத்தம் கொடுத்து. நடித்திருக்கிறார்.

தற்போது இந்த ரகசிய தகவல் இணையத்தில் வைரலாக இதுதான் அவர்களின் விவாகரத்துக்கு முக்கிய புள்ளியாக அமைந்ததாக தகவல்கள் கசிந்து வருகிறது.

இந்த ஒரு காரணத்தால் சைந்தவிக்கு கோபம் வர அது குறித்து கணவரிடம் எதிர்த்து பேசி இருக்கிறார் . பின்னர் நாளுக்கு நாள் சண்டை அதிகரிக்க அது விவாகரத்தில் சென்று போய் தற்போது முடிந்து விட்டதாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version