தனித்தனியாக பிரிந்த ஜிவி சைந்தவி.. விஜய் இறங்கி பண்ண பஞ்சாயத்து..? இந்த நடிகை தான் காரணம்..?

திரை உலகை பொருத்த வரை நட்சத்திர ஜோடிகள் அண்மைக்காலமாக விவாகரத்துகளை அறிவித்து வரக்கூடிய விஷயமானது பரவலாகி வரக்கூடிய நேரத்தில் மீண்டும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடியின் பிரிவு ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து இவர்களது பிரிவுக்கு காரணம் என்ன என்று மீடியாக்கள் பல வகைகளில் செய்திகளை வெளியிட்டு வரக்கூடிய வேளையில் உண்மையில் இந்த பிரிவுக்கு காரணம் என்ன என்பதை அண்மை பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

தனித்தனியா பிரிந்த ஜிவி சைந்தவி..

பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலிக்க ஆரம்பித்த இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தை பிறந்து சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் யார் கண் பட்டு இப்படி நடந்தது என்று தெரியாமல் பலரும் தவித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக இணையங்களில் இவர்கள் பிரிவு குறித்த விஷயங்கள் பெருமளவு புகைந்து வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.

அண்மையில் நடந்த பட வெளியீட்டு விழாவில் ஜிவி மற்றும் சைந்தவி கலந்து கொண்ட போது சில கேள்விகள் இருவர் மத்தியிலும் எழுப்பப்பட்டு இருந்த நிலையில் இருவரும் உற்சாகம் இல்லாமல் தான் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார்கள்.

இதனை அடுத்து ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவுக்கு முக்கியமான காரணம் என்ன என்று யோசிக்கும் போது அவர் இசை அமைப்பாளராக இருந்த போது எந்த விதமான பிரச்சனைகளும் அவர்களுக்குள் ஏற்பட்டது இல்லை.

அதுவே அவர் தன்னை ஓர் நடிகராக திரை உலகில் நிலைப்படுத்த முற்பட்டபோதும், பல படங்களில் நடித்ததை அடுத்து அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜிவி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவர் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கக் கூடிய சில படங்களுக்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்து கொடுத்திருக்கக் கூடிய சம்பவங்களும் நடந்தேறி உள்ளது.

கட்டப்பஞ்சாயத்தில் இறங்கிய விஜய்..

இந்த நிலையில் இவர்கள் பிரிவு என்று நேற்று அல்ல கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாகவே குடும்பத்துக்குள் பல்வேறு விஷயங்கள் நடக்க இவர்களது பிரிவை தடுக்க தளபதி விஜய் தன்னால் இயன்ற அளவு அவர்களுக்குள் பேசி சமாதானம் செய்ய பேசிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையவில்லை.

தலைவா படத்துக்கு முன்பிருந்தே ஜிவி பிரகாசம் விஜய்யும் மிகச்சிறந்த நண்பர்கள், ஜிவி அழைத்தால் விஜய் உடனே பேச கூடியவர் என்பதால் நிச்சயம் இந்த விஷயம் அவர் விஜயின் காதுக்கு சென்று அவரால் முடிந்ததை அவர் செய்திருக்கலாம்.

பிரிவுக்கு இந்த நடிகையா காரணம்..

ஜிவி பிரகாஷ் நடித்த படங்களில் தொடர்ந்து கயல் ஆனந்தி நடித்ததை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனை அடுத்து மற்றவர்கள் கருதும் படி அவர்களுக்குள் எதுவும் இல்லை என்ற விஷயத்தை ஓபன் ஆக உடைத்த பிறகு அந்த காம்போ உடைந்து விட்டது.

அது போல பேச்சுலர் படத்தில் ஜீவியோடு இணைந்து நடித்த நடிகையோடு கிசுகிசுக்கள் எழுந்தது. மேலும் இந்த படத்தில் இருவர் கெமிஸ்ட்ரியும் மிக சூப்பராக வொர்க் அவுட் ஆகிய இருந்ததாக பலரும் தெரிவித்து இருந்தார்கள்.

அதெல்லாம் இவர்களது பிரிவுக்கு காரணமாக இருக்க வாய்ப்பில்லை. எனினும் அந்த காரணம் என்னவென்றால் சைந்தவி தன் பிறந்த வீட்டை பெரிதாக மதித்து தான் சம்பாதித்த பணத்தை முழுவதும் அவர்களுக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கணவன் வீட்டாரை கவனிக்காமல் விட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது எந்த அளவு உண்மை என்று தெரியாத நிலையில் செய்ய பாலு இது பற்றி பேசி இருக்கக்கூடிய விஷயம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் பரவலாக பார்க்கப்பட்டு இணையத்தில் அதிக அளவு பேசப்படுகின்ற பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version