“GVM இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கலையே..” தெரிஞ்சு பண்றாரா.. இல்ல, தெரியாம பண்றாரா

பன்முகத் திறமையை கொண்ட கௌதம் வாசுதேவ் மேனன் @ GVM ஒரு சிறந்த இயக்குனர் என்பது மட்டுமல்லாமல் சிறப்பான கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் விளங்குகிறார்.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கில் மறு ஆக்க படங்களையும், ஹிந்தி படங்களையும் இயக்கி மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருக்கின்ற இயக்குனராக திகழ்கிறார்.

இயக்குனர் GVM..

இவர் இயக்கிய திரைப்படங்களான மின்னலே, வாணரம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சாதனையை புரிந்தது.

இதனை அடுத்து இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற படங்கள் இவர் பெயர் சொல்லும் விதத்தில் இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்று தந்தது.

மேலும் இவர் தயாரிப்பில் வெளி வந்த தங்கமீன்கள் திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை இவருக்கு பெற்றுக் கொடுத்தது. பாலக்காட்டு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் எம்சிசி பள்ளியில் மேல் படிப்பை முடித்தார்.

கௌதம் மேனன் திரைப்படம் என்றாலே ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படும். அத்தோடு சிறப்பான வித்தியாசமான கதை அம்சம் நிறைந்திருக்கும் என்று இவரை கொண்டாடாத ரசிகர்களின் இல்லை என்று கூறலாம்.

இப்படிப்பட்ட சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழக்கூடிய GVM இப்படி பண்ணுவாரு அப்படின்னு யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாத அளவு சில விஷயங்களை தரமாக செய்திருக்கிறார்.

இத தெரிஞ்சு தான் பண்றாரா..

இது போன்ற விஷயங்களை இவர் தெரிந்து தான் செய்தாரா? அல்லது தெரியாமல் செய்தாரா? என்பது தற்போது தெரியாமல் ரசிகர்கள் யாவரும் புலம்பி தவித்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் சில தமிழ் திரை உலக பிரபலங்களை பற்றி இவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு இவர் அளித்திருக்கும் பதிலும் இவரது உடல் மொழியையும் பார்த்தால் நிச்சயமாக இவரா? இப்படி செய்தார் என்று நீங்களும் நினைப்பீர்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தலைவர் என்று அழைக்க கூடிய நிலையில் இவரிடம் அவரை பற்றி கேட்ட போது தலைவருனா யாரு.. என்று அவர் பேசியதை பார்த்து பலரும் அதிர்ந்து விட்டார்கள். இதனை அடுத்து இவர் இதை தெரிந்து தான் சொன்னாரா? அல்லது வேண்டுமென்றே சொன்னாரா? என்பது போன்ற வகையில் சர்ச்சைகள் கிளம்பி உள்ளது.

இதனை அடுத்து தல என்றால் தமிழ் சினிமாவில் அஜித்தை தெரியாதவர்களோ, பேசாதவர்களோ இல்லை என்று கூறலாம். ஆனால் அவரைப் பற்றி கேட்ட கேள்விக்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் தலனா யாரு எனக்கு தெரியல.. என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து இவர் எல்லா ஆக்டரையுமே அடைமொழி சொல்லாமல் பெயர் சொல்லி தான் அழைப்பாராம்.

ஆனால் ஒரே ஒரு உச்சகட்ட தமிழ் நடிகரை மட்டும் இவர் அடைமொழியோடு அழைப்பது ஆச்சரியத்தை தந்திருப்பதாக கூறி இருக்கிறார்கள். அவர் வேறு யாரும் இல்லை. தளபதி தான்.
இதனை அடுத்து எல்லோரையுமே அவரது அடையாளங்களை சொல்லி அழைக்காத வாசுதேவ மேனன் இவரை மட்டும் அடையாளத்தை சொல்லி அழைத்து இருப்பது பெருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தை தான் தற்போது அனைவரும் பரபரப்பாக பேசி வருகிறார்கள். மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களோடு பட்டிமன்றம் போட்டு பேசி வருவது இணையத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version