“கொட்டிய இடத்தில் முடி வளர வேண்டுமா”? – இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் 100% ரிசல்ட்..!!

சுகாதாரம் இல்லாத பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை, பரம்பரை காரணமாக இன்று பல குழந்தைகளுக்கு  முடி கொட்டுதல் அதிகரித்து உள்ளது. மேலும் இது போன்ற மெல்லிய முடிகள் நீங்குவதற்கு காரணம் தைராய்டு சுரப்பில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள், தொற்றுகள் போன்றவை தான்.

எனவே இந்த முடி உதிர்தலில் இருந்து மீண்டு வரவும் முடி கொட்டிய இடத்தில் மீண்டும் தலைமுடி வளரவும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கொட்டிய இடத்தில் முடி வளர்வதற்கான டிப்ஸ்

👍கொட்டிய இடத்தில் உங்களது முடி சிறப்பாக வளர நீங்கள் பெப்பர் மின்ட் ஆயிலை பயன்படுத்தினால் போதுமானது. இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய். பாதாம் எண்ணெய். பெப்பர்மின்ட் எண்ணெய் என 3 எண்ண்ணெய்களையும் ஒன்றாக கலந்து வாரத்துக்கு இரண்டு முறை உச்சந்தலையில் தேய்த்து வந்தால் கட்டாயம் உங்கள் உதிர்ந்த முடியை அந்தப் பகுதியில் வளரும்.

👍 வெங்காய சாறினை நீங்கள் உங்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இதில் மெக்னீசியம், பொட்டாசியம்,  வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் உங்கள் தலைமுடியில் உதிர்ந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய ஆற்றல் வெங்காய சாறில் இருக்கும் சல்பருக்கு உள்ளது.

👍தினமும் நீங்கள் 10 விருந்து 15 நிமிடங்கள் உங்கள் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்து விடுவதின் மூலம் முடி வளர்ச்சியை தூண்டி விடக்கூடிய நிலை ஏற்படும்.

👍 உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்தால் முடியின் வேர் கால்கள் வலுப்பெற்று புதிய முடிகள் வளர்வதற்கு ஏதுவாக அமையும்.உச்சந்தலையில் நீங்கள் கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் முடி உதிர்கள் குறைவாவதோடு வளர்ச்சியும் மேம்படும். இதில் உள்ள எண்ணற்ற சத்துக்கள் உச்சந்தலையில் ஏற்படுகின்ற தொற்றுக்களை தவிர்க்க உதவி செய்கிறது.

👍கருவேப்பிலை இலையில் பீட்டா கரோட்டின், புரதம் அமினோ அமிலங்கள் நிறைய உள்ளதால் இவை முடியை வலிமைப்படுத்துவதற்கு உதவுகிறது. கருவேப்பிலையை அரைத்து ஹேர் மாஷ் ஆக பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உதிர்ந்த முடியை எளிதில் அந்த பகுதியில் வளர வைக்க முடியும்.

👍 தேங்காய் எண்ணெயும் முடி உதிர்வைத் தடுத்து முடியும். வேர்க்கால்களை வலிமைப்படுத்தக்கூடிய திறன் கொண்டது. புரத இழப்பை தடுக்க உதவி செய்வதால் முடி வளர்ச்சியை தூண்டும்.

 👍எனவே குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணையைக் கொண்டு மசாஜ் செய்து குளிப்பது மிகவும் நல்லது. அறிவியல் ஆராய்ச்சியின் படி ரோஸ்மேரி எண்ணையை நீங்கள் முடி கொட்டிய இடத்தில் தடவி வர தலைமுடி நன்கு வளரும்.

 👍இதனோடு நீங்கள் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் இவற்றில் இரண்டில் ஏதேனும் ஒன்றை கலந்தும் தேய்த்து பலனடைய முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …