“முடி நீளமா வளரணுமா..!” – அப்ப நீங்க வேம்பாளம் பட்டைய பயன்படுத்துங்க..!!

எல்லோருக்குமே முடி நீளமாக இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக பல்வேறு விதமான எண்ணெய்களை பயன்படுத்தி கூந்தல் பராமரிப்பில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார்கள்.

 அப்படி இருந்தும் அவர்கள் நினைத்தபடி முடி நீளமாக வளரவில்லை என்ற எண்ணம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய குறிப்புகளை நீங்கள் ஃபாலோ செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். அதற்கு இந்த ஒரே ஒரு பட்டை போதும் அதுதான் வேம்பாளம் பட்டை.

முடியை நீளமாக்கும் வேம்பாள பட்டை

பொதுவாக பெண்களின் ஹார்மோன் பிரச்சனை காரணமாக அதிக அளவு முடி உதிர்தல் ஏற்படும். அப்படி ஏற்படக்கூடிய சமயத்தில் நீங்கள் இந்த வேம்பாளம் பட்டை எண்ணெயை உங்கள் முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். இது உங்கள் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

இந்த வேம்பாள எண்ணெய் தயாரிக்க நீங்க வேம்பாள பட்டை இரண்டு சிறிய அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனோடு ஒரு கப் தேங்காய் எண்ணெய் மற்றும் கால் கப் விளக்கெண்ணையை சேர்த்து விடவும்.

 பின்னர் இதனை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மேற்கூறிய மூன்று பொருட்களையும் ஒன்றாக கலக்கி நான்கு முதல் ஐந்து நாட்கள் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து விடுங்கள்.

 நான்கு நாட்கள் கழிந்த பிறகு எண்ணெயின் நிறம் நன்றாக மாறி இருக்கும். இதை உங்கள் கண்கூடாக பார்க்கலாம். அப்படி எண்ணெய் நிறம் மாறி இருந்தால் அதை எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் உங்கள் தலையில் தேய்த்துக் கொள்ளவும்.

மேலும் இந்த எண்ணெயை நீங்கள் தினமும் தேய்த்துக் கொள்வதின் மூலம் முடி நீளமாவதோடு முடி உதிர்வதும் தடைபடும்.

சைனஸ் பிரச்சனை, சளி தொந்தரவு இருப்பவர்கள் இந்த எண்ணெயோடு இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகத்தை பொடித்து செய்து அதோடு கலந்து தேய்த்து வரும் போது உங்களுக்கு சளி தொல்லையும் சைனஸ் பிராபலமும் ஏற்படாது.

இந்த வேம்பாளம் பட்டை நாட்டு மருந்து கடைகளில் அதிக அளவு கிடைக்கும். எனவே நீங்கள் அதை வாங்கி மேற்கூறியபடி எண்ணெய் தயார் செய்து உங்கள் கூந்தலுக்கு தடவி வர, நீங்கள் நினைத்தபடி உங்கள் கூந்தல் மிக நீளமாக வளரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …