” தலைமுடி பிரச்சனை இனி எனக்கு இல்லை என கூற..!” – உங்க கூந்தல் ஆரோக்கியம் .. சூப்பர வளர டிப்ஸ்..!!

 கூந்தல் காற்றில் அலை அலையாக பாய்ந்து எந்தவிதமான  தலைமுடி பிரச்சனையும் இல்லை என்று கூறும் அளவுக்கு கூந்தலை ஆரோக்கியம்-மாக வைத்துக் கொள்ள விரும்பாத பெண்களை இல்லை என்று கூறலாம்.

 மேலும் இந்த கூந்தலின் மூலமாக அவர்களின் அழகு மேலும் மேலும் கூடுவதாக நினைத்திருக்கக்கூடிய பெண்கள் அவர்கள் முடி நன்கு வளரவும் தலைமுடியில் எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய டிப்ஸ்களை ஃபாலோ செய்தாலே நீண்ட அழகான பள பள கூந்தலை பெற முடியும்.

 நீண்ட அழகான கூந்தலை பெற டிப்ஸ்

 டிப்ஸ் 1

முடி உதிர்வு நீங்கவும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடவும் உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மருதாணியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு அரைத்து உங்கள் தலைகளில் ஹேர் பேக்காக போட்டு விடுங்கள்.

இது உலர்ந்த பின்பு நீங்கள் எப்போதும் போல உங்கள் தலையை குளிர்ந்த நீரில் அலசி விடுங்கள். மருதாணி உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு முடி உதிருதலையும், பொடுகு தொல்லையும் கட்டுப்படுத்தும் மருதாணியை தேய்த்து குளிப்பதற்கு முன்பு வெயில் நேரங்களில் நீங்கள் எதை செய்ய வேண்டும். இல்லை எனில் சளி பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 டிப்ஸ் 2

 செம்பருத்தி பூ ஒரு கைப்பிடி ஒரு கைப்பிடி கருவேப்பிலை இவை இரண்டையும் ஒன்றாக அரைத்து பேஸ்ட் போல் வந்த பின்பு இந்த கலவையை முடி முழுவதும் தடவி ஊற விட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் உங்கள் முடி ஆரோக்கியமாக வளர்வதற்கு ஏற்ற ஊட்டச்சத்துக்களை இவை இரண்டும் கொடுக்கும் கூந்தலும் ஆரோக்கியமாக வளர்வதோடு நீளமான கூந்தலை நீங்கள் பெற முடியும்.

டிப்ஸ் 3

 இளநரை மற்றும் செம்பட்டை முடியை கொண்டிருப்பவர்கள் தேங்காய் பாலை எடுத்து அந்த தேங்காய் பாலை தலையில் தேய்த்து குளித்து வர உங்கள் முடி வெண்மை நிறத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாறிவிடும். செம்பட்டையாக இருக்கக்கூடிய முடியும் கூட கருப்பாக மாறுவதால் நீங்கள் அடிக்கடி தேங்காய் பால் எடுத்து அதை உங்கள் முடிகளில் தடவி குளித்தால் நலம் தரும்.

டிப்ஸ் 4

 தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க கூடிய ஆற்றல் முட்டையின் வெள்ளைக்கருக்கு உள்ளது.எனவே இந்த வெள்ளைக்கருவை தலைமுடிகள் தேய்த்து குளிப்பதன் மூலம் தலைமுடி பளபளப்பாக மாறி ஆரோக்கியமாக இருக்கும்.

டிப்ஸ் 5

 அனைவருக்கும் நன்கு அறிந்த கற்றாழை எண்ணற்ற பயன்களைக் கொண்டது. இந்த கற்றாழை சாறினை நீங்கள் எடுத்து உங்கள் முடி கால்கள் வரை செல்லும்படி அழுத்தி தேய்த்து மசாஜ் செய்து பின் குளிப்பதன் மூலம் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு முடி இருக்கக்கூடிய வறட்சி நீங்கும். மேலும் முடி வெடித்த  பிளவுபட்ட நிலைமை சரியாகும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …