பாலிவுட் திரைகளுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழில் தனுசுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ஹன்சிகா மோத்வானி.
எனது முதல் படத்திலேயே ரசிகர்களை தனது கொழு கொழு மேனியால் கவர்ந்து இழுத்த இவரை சின்ன குஷ்பூ என்று திரை உலகில் அனைவரும் அழைத்தனர்.
இதனை அடுத்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் ஜெயம் ரவி, விஜய்,சூர்யா, சிம்பு என பல முன்னணி தமிழ் நடிகர்களோடு இணைந்து இவர் நடித்தார்.
மேலும் சிம்புவோடு இவர் இணைந்து நடித்த வாலு படத்தில் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது இது திருமணம் வரை சென்று திடீரென ஏற்பட்ட கருத்து வேற்றுபாடு காலமாக பிரேக்கப்பில் முடிந்தது என பல வகையான கிசுகிசுப்புகள் வெளிவந்தது.
இதனையடுத்து ஹன்சிகா நடிப்பில் தொடர்ந்து வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியதை அடுத்து ஹன்சிகா திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்துவிட்டார். இந்த தகவலை உறுதி செய்யும் விதத்தில் இவர் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற திட்டமிட்டுள்ளதாக பல செய்திகள் வெளிவந்தது.
இதனை அடுத்து ஹன்சிகா திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் படு வேகமாக நடந்து வரும் வேளையில் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிற தொழில் அதிபர் ஆன சோஹைல் கதுரியாவை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி ஹன்சிகாவின் தோழியான ரிங்கி என்பவரின் கணவர் தான் இவர் 2016 ஆம் ஆண்டு இவருக்கும் ரிங்கியுடன் திருமணம் நடந்தபோது அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றிருக்கிறார்.
இதனை அடுத்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிய நிலையில் தொழில் அதிபரை ஹன்சிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற அதிர்ச்சியான செய்தியை கேட்டு ரசிகர்கள் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறார்கள்.