என்னது… ஹன்சிகா மோத்வானிக்கு விரைவில் டும் டும் டும்…!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தன் நடிப்பால் மக்களை ஈர்த்தவர் தான் ஹன்சிகா மோத்வானி.

2011 ஆம் ஆண்டு வெளிவந்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர்  எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான்கராத்தே,  சேட்டை,  சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

 இவர் திரைப்படத்தில் நடிப்போடு மட்டும் அல்லாமல் கவர்ச்சியும் தேவையான அளவு காட்டக்கூடிய நடிகை என்பதால் குறுகிய காலத்திலேயே  வளர்ச்சி அடைந்த நடிகைகளில் ஒருவராக இவர் மாறிவிட்டார்.

ஆரம்பத்தில் தனது கொழு கொழுப்பான மேனியால் சின்ன குஷ்பூ என்று அழைக்கப்பட்ட இவர் தற்போது உடல் நன்கு இளைத்து ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார்.

இவரின் 50 வது திரைப்படம் மகா வெளிவந்தது .எனினும்  சொல்லிக் கொள்ளும் படியான பெரும் வெற்றியை இது ஹன்சிகா மோத்வானி தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 இன்னும் ஐந்து படங்கள் மட்டுமே தன் கையில் இருக்கக்கூடிய வேலையில் இப்போது இவருக்கு முப்பத்தி ஒரு வயது ஆகிறது. ஹன்சிகா மிக விரைவில் திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்று அதிகாரபூர்வமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வந்துள்ளது.

இவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் இவரது திருமணம்  ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடக்க உள்ளது.

எனவே அதற்கான ஆயத்தப் பணிகளை அரண்மனையில் இப்போதே தொடங்கி விட்டார்கள்.ஹன்சிகா வரும் டிசம்பர் மாத இறுதியில் இவரது திருமணம் நடக்கும் என்று தெரியவந்துள்ளது. இதை எடுத்து இவர் வீட்டிலும் மாப்பிள்ளை வீட்டிலும் திருமண வைபோகம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

 சுமார் 450 ஆண்டுகளுக்கு முந்தைய ஜெய்ப்பூர் அரண்மனை தற்போது ஹன்சிகா மோத்வானியின் திருமணத்திற்காக  புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து திரையுலகைச் சேர்ந்தவர்களும் இவரது ரசிகர்களும் இவரது திருமண வாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தற்போதே தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam