ஹன்சிகாவின் டும்… டும்… டும்… 450 ஆண்டு பழமை வாய்ந்த அரண்மனையில் மெஹந்தியுடன் ஆரம்பமானதா?

தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகர்களாக திகழும் விஜய் தனுஷ் சிம்பு போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்து பேமஸான நடிகை தான் ஹன்சிகா மோத்வானி.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம், மலையாளம், ஹிந்தி என பழமொழிகளில் நடித்து இருக்கக்கூடிய இவர் வரும் டிசம்பர் நான்காம் தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி சிவகார்த்திகேயனோடு இணைந்து டார்லிங் டம்பக்கு என்ற  பாடலுக்கு மிகச் சிறப்பான முறையில் நடனம் ஆடி இருப்பார்  எந்த பாடலானது பட்டிதொட்டி எங்கும் பரவியதோடு மட்டுமல்லாமல் இவருக்கு குட்டி குஷ்பூ என்ற பெயரையும் பெற்று தந்தது.

 மேலும் இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்ததோடு சில நாட்களுக்கு முன் பாரிஸில் உள்ள ஈபில் டவர் முன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு ஆசிரியத்தை ஏற்படுத்தினார்.

இதனை அடுத்து இவரது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு இன்னும் ஓரிரு நாட்கள் உள்ள நிலையில் முழு வீச்சில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 அந்த வகையில் ஹன்சிகாவும் ஷோஹைல் கத்துரியாவும் மெஹந்தி விழா நேற்று நடைபெற்றது இதற்காக இவர்கள் தயாராகும் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதனை அடுத்து இவரது திருமண கொண்டாட்டங்கள் களைகட்டி வருவதால் ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் திரை உலகை சேர்ந்தோரும் இதற்கான வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சில ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆவதை எண்ணி சோகத்தோடு காட்சியளிக்கிறார்கள் இனி இவரை திரையில் காண முடியுமா என்ற சந்தேகத்தோடு அவர்கள் யோசித்து வருகிறார்கள்.

இதனை அடுத்து சில ரசிகர்கள் திரையில் பார்க்க முடியவில்லை என்றாலும் சமூக வலைதள பக்கங்களில் இவர் புகைப்படங்களை வெளியிட்டு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் என்று அவர்களுக்குள் சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …