சிவகார்த்திகேயன் கூட எல்லாம் ஏன் நடிக்கிறீங்கன்னு எச்சரிக்கை பண்ணாங்க.. பிரபல நடிகை பேச்சு..!

சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் சிகரத்தை தொட்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மிகவும் என்டர்டைன்மென்ட் ஆக ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கொண்டு சென்றார் அவரது பேச்சை கேட்பதற்காகவே விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை பார்க்க துவங்கினர் மக்கள்.

இந்த நிலையில் திரைத்துறையினர் பலரது கவனத்தை ஈர்க்க துவங்கினார் சிவகார்த்திகேயன். இதற்கு நடுவே விஜய் மாதிரியான பெரிய நடிகர்களையும் இவர் பேட்டி எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் நடிகர் தனுஷ் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று கொடுத்தார்.

சிவகார்த்திகேயன் வளர்ச்சி:

தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்ற பிறகு சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அப்படியே நடித்துக் கொண்டிருந்தால் அது மக்களுக்கு சலிப்பு தட்டி விடும் என்பதை அறிந்த சிவகார்த்திகேயன் பிரபலமாக இருந்த காலகட்டங்களிலேயே தொடர்ந்து சீரியஸ் ஆன கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

அதன் மூலமாக எப்படி நடித்தாலும் சிவகார்த்திகேயனை மக்கள் பார்ப்பார்கள் என்கிற எண்ணம் உருவாகியுள்ளது. தற்சமயம் இவர் நடித்து வரும் அமரன் திரைப்படத்தில் கூட முழுக்க முழுக்க ஒரு சீரியசான கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் நடிகை ஹன்சிகா. அதில் அவர் கூறும் பொழுது சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிக்கும் போது சிவகார்த்திகேயனைவிட கொஞ்சம் பிரபலமான நடிகையாக இருந்தார் ஹன்சிகா.

ஹன்சிகா சொன்ன விஷயம்:

அப்பொழுது பலரும் என்னிடம் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து நடிக்காதீர்கள். அவர் இப்பொழுதுதான் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார் என்று எச்சரித்தனர். ஆனால் நான் அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை .

படத்தின் கதை பிடித்திருந்ததால் அந்த படத்தில் நடித்தேன் பிறகு சிவகார்த்திகேயன் இப்பொழுது எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார் என்பது பலரும் அறிந்த விஷயமே எனவே எந்த ஒரு நடிகரையும் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று கூறியிருக்கிறார் ஹன்சிகா.

அவர் சொன்னது போலவே இப்பொழுது ஹன்சிகா திரைத்துறையில் பெரிய மார்க்கெட்டை பிடிக்கவில்லை என்றாலும் கூட சிவகார்த்திகேயன் விஜய்க்கு அடுத்தபடியாக பெரிய நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version