அவனை பத்தி என்ன சொல்றது.. திட்ட வார்த்தையே இல்ல.. எதிர்நீச்சல் ஹரிப்பிரியா யாரை கழுவி ஊத்துறாங்கன்னு தெரியுமா..?

ஹரிப்பிரியா இசை ஆரம்ப காலங்களில் தொகுப்பாளராக சின்னத்திரையில் பணிபுரிந்தவர். இதனை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக கனா காணும் காலங்கள் மூலம் சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் இதனை அடுத்து பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தற்போது ஹரிப்பிரியா இசை நடித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களால் பெருமளவு விரும்பப்படுகின்ற சீரியல்களில் ஒன்றாகவும், சன் டிவியின் டிஆர்பி ரேட்டை தூக்கி பிடிக்க கூடிய வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியலாகவும் விளங்குகிறது.

எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..

2011 ஆம் ஆண்டு சின்ன திரையில் பயணத்தை ஆரம்பித்த ஹரிப்பிரியா இசை 2015-ல் லட்சுமி வந்தாச்சு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 2016-ல் பிரியமானவள் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2019 ஆம் ஆண்டு கண்மணி என்ற சீரியலில் ஆன்ட்டி ஹீரோயினி ரோல் செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியாக கலக்கி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

இந்த சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் இவர் கணவராக நடித்து வரக்கூடிய நடிகரோடு இணைந்து இவர் நடித்திருக்கும் விதத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பொதுவாகவே பெண்களை அடக்கி ஆளக்கூடிய திரைப்படங்களும் சீரியல்களும் வந்து இருந்த வேளையில் பெண்களை உயர்த்தி காட்டக் கூடிய வகையில் பெண்கள் அனைவரும் ஒரு குடும்பத்தில் இணைந்து புரட்சி பேசும் தொடராக வெளி வரும் இந்த எதிர்நீச்சல் தொடர் பல ரசிகர்களை கொண்டுள்ளது.

அவனைப் பத்தி என்ன சொல்றது..

அந்த வகையில் நடிகை ஹரிப்பிரியா இசை அண்மை பேட்டி ஒன்றில் பேசிய பேச்சுக்களை தான் தற்போது ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். இதற்கு காரணம் இந்த பேட்டியில் எதிர்நீச்சலில் இவருக்கு கணவனாக நடித்த கதிர் கேரக்டர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அப்படி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவன பத்தி என்ன சொல்றது.. கெட்ட வார்த்தைகளே இல்லை.. ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல ஒரு நாள் நந்தினி ஆகிய நான் கதிரை பளார் என்று அறைய வேண்டும் இந்த நிகழ்வு எப்போது நடக்கும் என்று நானும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அத்தோடு கதிர் கேரக்டர் பற்றி பேசும் போது சரியான பைத்தியக்காரர்கள் இருந்தால் கூட அவர்களுக்கும் மேலும் பைத்தியம் பிடிக்க வைக்க கூடிய வகையில் இருக்கக்கூடிய பேர்வழி தான். இவரை ஒரு மெண்டல் டாக்டரிடம் கூட்டி சென்றாலும் அந்த டாக்டருக்கு மெண்டல் ஏற்பட்டுவிடும் என்ற கருத்தையும் கூறி இருக்கிறார்.

கழுவி ஊற்றிய விவகாரம்..

இதனை அடுத்து எதிர்நீச்சல் சீரியலில் மட்டுமல்ல ஹரிப்பிரியா இசை நந்தினியாகவே அந்த பேட்டியில் மாறி தனது கணவனான கதிர் பற்றி விவகாரமான வார்த்தைகளை சொல்லி பங்கப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் கழுவி ஊற்றி இருக்கிறார்கள்.

இந்தப் பேட்டியில் ஹரிப்பிரியா இசை பேசிய விதத்தைப் பார்த்து பலரும் வாயடைத்துப் போனதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் ஒருத்தரை பங்கம் செய்ய வேண்டுமா? என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.

சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் நந்தினி கேரக்டர் பற்றி பலவிதமான பேசி வரும் வேளையில் இவரின் இந்த மாதிரி பேட்டி அளித்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version