நிஜ வாழ்வில் இவ்ளோ கஷ்டமா..? எதிர்நீச்சல் சீரியல் நந்தினியின் மர்ம பக்கங்கள்..!

சினிமா நடிகையாக இருந்தாலும், சீரியல் நடிகையாக இருந்தாலும், சாதாரண பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கை என்பது எல்லோருக்கும் பொதுவானதாக தான் இருக்கிறது.

வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்கள், சிரமங்கள், சோகங்கள், துயரங்கள், துரோகங்கள், வலிகள் என் பலரும் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதில் நடிகைகள் வாழ்க்கை மட்டும் விதிவிலக்கல்ல; அவர்கள் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.

ஹரிப்பிரியா இசை

தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தவர் நடிகை ஹரிப்ரியா இசை. இவர் சன் டிவியில் மிகவும் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருப்பவர் ஹரிப்பிரியா இசை. இந்த சீரியலில் இவரது கேரக்டர் பெயர் நந்தினி.

எதிர்நீச்சல் நந்தினிதான் இந்த சீரியலில் ஒரு முக்கிய கேரக்டராக இருந்து வருகிறார். இவரது உண்மையான பெயர் ஹரிப்பிரியா இசை என்றாலும், இவரை எதிர்நீச்சல் நந்தினி என்றால்தான் பலருக்கும் தெரியும்.

எதிர்நீச்சல் நந்தினி

பல சீரியல்களில் ஹரிப்பிரியா இசை நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல்தான் நந்தினிக்கு மிகப்பெரிய அடையாளத்தையும், வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றுச் சென்றது.

குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் இவர் பேசுகிற டயலாக்கை ரசிகர்கள் மிகவும் ரசித்து இவரை பாராட்டி வருகின்றனர்.

ஹரிப்பிரியா இசை முதன்முதலில் சின்னத்திரையில் அறிமுகமானது கனாக்காலம் காணும் காலங்கள். இந்த சீரியலில் நடித்துதான் மக்கள் மத்தியில் ஹரிப்பிரியா பிரபலமானார்.

அடுத்து பிரியமானவள், லட்சுமி வந்தாச்சு, கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

விக்னேஷ் குமாருடன் காதல் திருமணம்

இந்நிலையில், சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார். இதற்கிடையே இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். ஹரிப்பிரியா, பல ஆண்டுகளாக தனது மகனுடன் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஜோவிகாவின் அப்பா நான் இல்லை.. தகாத உறவில் பெற்றெடுத்தார்.. வனிதா முன்னாள் கணவர் பகீர்..!

இதை தொடர்ந்து சன் டிவியில் வணக்கம் தமிழா, சிறப்பு பாடல்களை தொகுத்து வழங்குவது போன்ற பணிகளில் சன் டிவியில் தொடர்ந்து ஹரிப்பிரியா ஈடுபட்டு வந்தார்.

இணை தொகுப்பாளருடன் காதல்

இந்நிலையில், இணை தொகுப்பாளராக இருந்து வரும் அசார் என்பவருடன் ஹரிப்பிரியா இசை காதல் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு உள்ளது என்றும் தகவல் பரவியது.

இதையும் படியுங்கள்: ஆத்தாடி.. கீழ ஒண்ணுமே போடாமல் கடல் மேல் நிற்கும் காஜல் அகர்வால்.. வைரல் போட்டோ..!

என்னுடைய கேரக்டர் அது

இதுகுறித்து பேசிய ஹரிப்பிரியா இசை, எல்லோரிடமும் சந்தோஷமாக பேசுவது, பழகுவது என்பது என்னுடைய கேரக்டர். மற்றவர்களை போல, நான் அவரிடமும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக பேசிப் பழகினேன். இதில் என்னுடைய தவறு ஏதுமில்லை.

பார்ப்பவர்கள் தவறான கண்ணோடு பார்த்தால், அது அவர்கள் மீதுதான் தவறுதானே தவிர, என்னுடைய மனதில் எந்த தவறும் இல்லை, என்று பதில் தந்திருக்கிறார்.

நிஜ வாழ்க்கையிலும் எதிர்நீச்சல்

எதிர்நீச்சல் சீரியலில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஹரிப்பிரியா இசை.

இதையறிந்த பலரும், நிஜ வாழ்வில் இவ்ளோ கஷ்டமா..? எதிர்நீச்சல் சீரியல் நந்தினியின் மர்ம பக்கங்களை தெரிந்துக்கொண்டு வருத்தப்படுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version