DIVORCE பத்தி கமெண்ட்ஸ் பண்ண யாருக்கும் ரைட்ஸ் இல்ல – எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா இசை அதிரடி பேச்சு!!

திரையுலகில் மட்டுமல்லாமல் என்றிருக்கும் சமுதாயத்திலும் விவாகரத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த விவாகரத்துக்கள் எதனால் நடக்கிறது. ஏன் இவ்வளவு விவாகரத்து வழக்குகள் குவிகிறது என்ற கோணத்தில் பலரும் பல்வேறு வகையான விஷயங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக திகழும் சில நீண்ட காலம் இணைந்து வாழ்ந்து இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு விவாகரத்து பெற்று விடுகிறார்கள். அந்த வரிசையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா இசை விவாகரத்து பற்றி பகிர்ந்த பல விஷயங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

எதிர்நீச்சல் நடிகை ஹரிப்பிரியா இசை..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

கனா காணும் காலங்கள் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் 2011 – ஆம் ஆண்டு தமிழ் சீரியல்களில் நடித்ததை அடுத்து 2015-இல் லட்சுமி வந்தாச்சு 2016-இல் பிரியமானவள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் சீரியலில் 2019-ஆம் ஆண்டு கண்மணி எனும் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர் 2022-ஆம் ஆண்டு முதல் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இதனை அடுத்து 2012-இல் தொலைக்காட்சி நடிகரான விக்னேஷ் குமாரை திருமணம் செய்து கொண்ட இவர் 2020-இல் கருத்து வேற்றுமை ஏற்பட்டு தன் கணவரை விட்டு பிரிந்து தற்போது தனித்து வாழ்ந்து வருகிறார்.

கொக்க.. மக்கா.. தாங்கலடா விவாகரத்துல இம்பூட்டு விஷயமா?

சமூக வலைதளப்பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அசர வைப்பார். அது மட்டுமல்லாமல் பிரபல தனியார் youtube சேனல்களுக்கும் பிற தனியார் சேனல்களுக்கும் பேட்டி அளிக்க கூடிய இவர் அண்மை பேட்டி ஒன்றில் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அசந்து போய்விட்டார்கள்.

இந்தப் பேட்டியின் போது அவரிடம் விவாகரத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள். உங்கள் பார்வையில் விவாகரத்து பற்றிய கருத்துக்கள் என்ன என்ற கேள்வி வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் தான் அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய வகையில் இருந்தது.

இதற்கு காரணம் இவரும் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விலகி தற்போது தனித்து வாழ்ந்து வரக்கூடியவர். இவருடைய பார்வையில் விவாகரத்து என்பது பெண்களுக்கு கிடைக்கும் விடுதலை என்று சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையின் தன்மையை பொறுத்து இந்த விவாகரத்து அமையும்.

எனவே விவாகரத்து நல்லதா? அல்லது கெட்டதா? என்ற விஷயமானது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையை பொறுத்து அமைவதால் அது பற்றி நாம் விளக்கமாக எதையும் சொல்ல முடியாது. அந்தப் பெண்ணின் மனநிலைக்கு அவருடைய வாழ்க்கையை பொருத்தும் தான் விவாகரத்தின் நிலைப்பாடு இருக்கும்.

DIVORCE பத்தி கமெண்ட்ஸ் பண்ண ரைட்ஸ் இல்ல..

மேலும் விவாகரத்து என்பது ஒரு கெட்ட முடிவா? அல்லது நல்ல ஆரம்பமா? என்ற கேள்விக்கு அது ஒவ்வொரு பெண்ணின் நிலையை பொறுத்து உள்ளது என்று உறுதிபட தெரிவித்ததோடு இந்த விவாகரத்து பத்தி கமெண்ட் பண்ண யாருக்குமே ரைட்ஸ் இல்லை என்று அடித்து பேசி இருக்கிறார்.

மேலும் அந்த உறவில் இருக்கும் இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாக இதை கருதுவதால் அவர்கள் இருவரும் மட்டும்தான் இதைப்பற்றி முடிவு எடுக்க வேண்டும். இதில் மற்றவர்கள் நுழைவது என்பது அநாகரீகம் மட்டுமல்லாமல் தேவையில்லாத ஒன்று என்று சொல்லிவிட்டார்.

அதற்கு உதாரணமாக ஐந்து விரல்கள் ஒரே மாதிரி நம் கைகளில் இருக்கிறதா! அது போல தான் ஒரு பெண்ணின் வாழ்க்கையை போல இன்னொரு பெண்ணின் வாழ்க்கை அமையாது. எனவே அது அவங்களோட சொந்த விருப்பு வெறுப்பு தான் என பக்குவமாக பேசியது பல மத்தியிலும் பேசும் பொருள் ஆகி உள்ளது.

எனவே மேலோட்டமாக இது தவறு இது சரி என்று நாம் சொல்லுவது சரியல்ல என்று கூறி அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும் ஹரிப்பிரியா இசையின் இந்த பேச்சானது வைரலாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version