வயதான நபருடன் இரண்டாம் திருமணம்..? எதிர்நீச்சல் ஹரிப்பிரியா கொடுத்த பதிலை பாருங்க.!

ஹரிப்பிரியா இசை ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி நடிகையாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் விளங்கியவர். இவர் தமிழ் மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

கனா காணும் காலங்கள் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகமாகிய இவர் இந்த தொடரை அடுத்து பல தொடர்களில் நடித்து தமிழக மக்களின் இல்லத்தில் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார்.

எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..

தற்போது சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டர் ரோடில் நடித்து வரும் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்கள்.

2011-ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது சீரியல் வாழ்க்கை 2015-இல் லட்சுமி வந்தாச்சு, 2016-இல் பிரியமானவள், 2019-இல் கண்மணி போன்ற தொடர்களில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வயதான நபருடன் திருமணமா?..

ஹரிப்பிரியா இசை 2012 -ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகரான விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து 2020-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணித்து புகைப்படங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் ரீல்ஸ் வீடியோக்களையும் செய்து ரசிகர்களை அசர வைப்பார்.

மேலும் தற்போது இணையம் முழுவதும் எதிர்நீச்சல் ஹரிப்ரியா வயதான ஒரு நபரோடு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி வெளி வந்திருக்கிறது. மேலும் இந்த செய்தியை youtube சேனல் ஒன்று  பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹரிப்பிரியா யாருடா நீங்க எல்லாம் வேற பொழப்பா? உங்களுக்கு வேற வேல இல்லையா என்பது போல பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஹரிப்பிரியா கொடுத்த பதில்..

அப்படி என்ன பதிலடி கொடுத்திருக்கிறார் .என்பதை நீங்கள்  தெரிந்து கொள்ள வேண்டாமா? இப்போதே இதை பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் ஹரிப்ரியா கொடுத்த பதிலடி சரியான பதிலடி தான். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து எதற்காக இப்படி பெயர் எடுக்க நினைக்கிறார்கள். இதுவும் ஒரு பொழப்பா? என்று கேட்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட நண்பர்கள் எத்தோடு விடாமல் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் வதந்தியாக கிளம்பி இருக்கும் எந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் பேசி வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களோ இது போல பொய்யான தகவல்களை பரப்புவதை எப்போது தான் இது போன்ற ஆட்கள் விடுவார்கள் என்று தெரியாமல் இவர்களுக்கு தக்க பதிலடியைத் தருவதோடு மட்டுமல்லாமல் இது போன்ற விஷயங்களை நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version