ஆணவத்தில் மட்டும் ஆடவே கூடாது.. நல்ல வேளை STAR படத்தில் நடிக்கல.. ஹரிஷ் கல்யாண் பதிலடி..!

கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் தான் ஸ்டார் இந்த திரைப்படத்தில் முன்னதாக பிரபல தமிழ் சினிமாவின் இளம் ஹீரோ ஒருவர் நடிக்க கமிட் ஆகியிருந்தார் .

ஆனால் அவர் திடீரென படத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பின்னர் இந்த படம் கவின் நடிப்பில் வெளிவந்த மாபெரும் ஹிட் அடித்திருக்கிறது.

“ஸ்டார்” பட வாய்ப்பை தவறவிட்ட இளம் நடிகர்;

இதனால் அந்த இளம் நடிகர் தொடர்ந்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவர் இந்த வாய்ப்பை தவற விட்டு விட்டதாக கூறி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

நடிகர் கவின் முதன் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக திரைத்துறையில் அறிமுகமாகி அதன் பிறகு சீரியல் நடிகராக சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார்.

எந்த ஒரு திரை பின்னணி கொண்ட குடும்பமும் இல்லாமல் தனியாக வந்து தனது திறமையை வெளிக்காட்டி திரைத்துறையில் நுழைந்து இன்று இளம் நடிகராக சாதித்து காட்டியிருக்கிறார்.

கவின் சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார். கனா காணும் காலங்கள் அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தையும் கொடுத்தது.

அதன் பிறகு திரைப்படத்திலிருந்து வாய்ப்புகள் கிடைக்க முதன் முதலில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார்.

கவினின் முதல் திரைப்படம்:

அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான கவினுக்கு ஜோடியாக பிரபல நடிகை ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.

இப்படம் அவருக்கு ஒரு நல்ல அடையாள படமாக அமைந்தது. அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க 3வது சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு பெரும் புகழ்பெற்றார் கவின்.

அந்த நிகழ்ச்சியில் மூலம் தான் யார் என்று மீண்டும் மக்களுக்கு ஒரு முறை நிரூபித்து காட்டினார் கவின். அதன் பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

லிப்ட் திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றதை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை குவித்தார்.

அப்படம் பெரிய வெற்றி படமாக அமைந்ததோடு கவினின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இதை அடுத்து கவின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்ல அவர் தனது சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தி விட்டார்.

‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றி:

ஸ்டார் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அந்த படத்திலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி திரையரங்கங்களில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இப்படத்தில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஒரு இளம் கலைஞனின் ஆசை அதற்காக அவன் படும் கஷ்டங்கள் துயரங்கள் உள்ளிட்ட எல்லாமே தத்ரூபமாக காட்டப்பட்டு இருக்கிறது .

இந்த கதைக்கு கவின் அவ்வளவு கச்சிதமாக பொருந்தி விட்டார் என ரசிகர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.

இப்படியான நேரத்தில் கவின் நடிப்பதற்கு முன் அந்த படத்தில் நடிக்க இருந்தது பிரபல இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் தான்.

அந்த படத்தில் அவர் கமிட்டாகி அதற்காக போட்டோ சூட் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் உள்ளிட்டவை கூட வெளியாகியிருந்தது.

படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஹாரிஸ் கல்யாண் இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறி விலகி விட்டார் .

கவினின் அசாத்திய நடிப்பு:

அதை எடுத்து கவின் இந்த பட வாய்ப்பு தக்க வைத்துக்கொண்டு அதில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

கவினின் நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டாலும் சில பேர் படத்தின் கதை எதை நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை என கலவையான விமர்சனத்தை தெரிவித்து வந்தார்கள்.

ஒட்டுமொத்த ரசிகர்களாலும் பாராட்டப்பட்டதாக அமைந்ததை அடுத்து இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க தவறிவிட்டார் அவர் வாய்ப்பை தவறவிட்டார்.

இந்த வாய்ப்பினை கவின் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஒருவேளை ஹரிஷ் கல்யாணம் மட்டும் நடித்திருந்தால் அவர் மிகப்பெரிய நடிகராக பேசப்பட்டு இருப்பார் என ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இப்படியான சமயத்தில் ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார் அதில்,

கால்பந்து டீமில் எல்லோரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் கோல் போடும்போது கோல் கம்பியில் பட்டு வெளியில் வந்து விடுகிறது.

ஆனால் கொஞ்ச நேரம் கழித்து கோல் சக்ஸஸ் ஆகி விடுகிறது. இது எல்லாம் வைத்து பார்க்கும் போது ஹரிஷ் கல்யாண் என்ன சொல்ல வருகிறார் என்றால் படம் ரிலீஸ் ஆகி ஒன்று இரண்டு நாள் தான் ஆகிறது.

வாய்ப்பை தவறவிட்ட ஹரிஷ் கல்யாண்;

கொஞ்ச நாள் போனால் தான் தெரியும் படம் சக்ஸஸ் ஆகி இருக்கா? இல்லையா? என்று… எனவே உடனடியாக இதை முடிவு செய்யக்கூடாது என்ற தொனியில் ஹரிஷ் கல்யாண் இந்த பதிவை போட்டு இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் கவின் உடன் எந்த ஒரு வெறுப்பும் ஹரிஷ் கல்யாணுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால், முன்னதாக கவின் அவர்கள் ஸ்டார் படத்தை குறித்து வெளியிட்ட வீடியோவிற்கு ஹரிஷ் கல்யாண் “All the best brother my hearty wishes” என மனதார வாழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version