தளபதியோடு இணைய இருந்த தோனி அந்தர்பல்டி… சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண்… லக்கி பாய் ஆனாரா?

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

 இதனை அடுத்து இவருக்கு யுவன் சங்கர் ராஜா தயாரித்த பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓமன பெண்ணே என்ற பல படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது.

 மேலும் இவர் தற்போது 100 கோடி வானவில் மற்றும்  டீசல் படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.

 இவர் நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருந்தார். இதை அடுத்து சென்னையில் உள்ள திருவேற்காட்டில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் இருவரும் பிரமாண்ட முறையில் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணத்தை செய்து கொண்டார்கள்.

 திருமணம் முடிந்த கையோடு இவர் தன்னை மனைவியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். தற்போது இந்த புகைப்படம் வைவலாக பரவி வரும் நிலையில் திருமணம் முடிந்த கையோடு இவருக்கு ஒரு லக் அடித்திருக்கிறது என்று கூறலாம்.

 கிரிக்கெட் வீரரான தோனி தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளி வந்தது. அந்த படத்தில் நடிகர் சூர்யா அல்லது தளபதி விஜய் நடிப்பார் என்ற செய்திகள் விறுவிறுப்பாக பேசப்பட்டது.

 ஆனால் இன்று யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் அந்த முதல் படத்தில் நடிக்கப் போகிறவர் ஹரிஷ் கல்யாண் தான் என்ற முக்கிய செய்தியை அதிகாரப்பூர்வமாக அந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு ஆச்சரியத்தில் அனைவரையும் ஆழ்த்திவிட்டது.

இதனை அடுத்து அனைவரும் திருமணமான மறுநிமிடமே இவருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட உள்ளது என்று பேசிக்கொள்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …