மதம் மாறிட்டியா..? பிரபல நடிகை எழுப்பிய கேள்விக்கு மணிமேகலை அதிரடி பதில்..!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வந்தவர் தான் விஜே மணிமேகலை இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது பணியை தொடங்கினார்.

அதன்பிறகு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். குறிப்பாக சன்மியூசிக் தொலைக்காட்சியில் பிஜே அஞ்சனாவுடன் இவர் இணைந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதால் இவர்கள் இருவரும் சகோதரிகள் என அப்போதே பேசிக்கொண்டார்கள் .

தொகுப்பாளினி மணிமேகலை:

அந்த அளவுக்கு ஒரே முக ஜாடையில் ஒரே மாதிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கைதேந்தவர்களாக இருந்து வந்தார்கள் .

கிட்டத்தட்ட 12 வருடங்களாக தொகுப்பாளினியாக மணிமேகலை இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாக முடியவில்லை. இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு நடன இயக்குனரான உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் இவர்களது திருமணம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், பெற்றோர்களை எதிர்த்து மணிமேகலை திருமணம் செய்து கொண்டதார்.

தனது கணவருடன் தனி குடுத்தனம் சென்று மிகவும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனது கெரியரிலும் முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்.

மணிமேகலையின் இரண்டாவது இன்னிங்ஸ்!

இதனிடையே அவர் கொரோனா காலகட்டத்தில் கிராமம் ஒன்றுக்கு சென்று அங்கு இருந்து எடுத்துக்கொண்ட வீடியோக்கள் மற்றும் அங்குள்ள மக்கள் நண்பர்களுடன் பேசி பழகும் விதம் உள்ளிட்டவற்றைத் YouTubeல் வெளியிட்டதன் மூலமாக மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

அதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைக்க மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் மணிமேகலை.
அந்த சமயத்தில் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதில் மிகப்பெரிய அளவில் தனது பெர்பார்மென்ஸ் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். மணிமேகலை தொடர்ந்து YouTube தளத்தில் தனது வீடியோக்களை வெளியிட்டு வந்தார் .

இதனிடையே தனது சொந்த ஊரான அந்த கிராமத்தில் மிகப்பெரிய இடம் ஒன்றை வாங்கி அங்கு சொந்தமாக வீடு கட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்று வந்தார்.

மீண்டும் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கணவருக்காக மதம் மாறிட்டியா?

இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் நடிகை சகிலா அவரை பேட்டி கண்டார் .

பேட்டியின் போது தன்னுடைய கணவருக்காக நீ மதம் மாறிவிட்டாயா என்ற கேள்வியை எழுப்பினார் நடிகை ஷகீலா.

இதனை கேட்ட தொகுப்பாளினி மணிமேகலை நான் மதம் மாறவில்லை. அவர் என்னுடன் கோயிலுக்கு வருவார். நான் அவருடன் மசூதிக்கு செல்வேன் இது வழக்கமாக நடந்து வருகிறது.

யாரும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை. அவர்கள் அவர்களாகவே இருக்கிறோம் என பதில் கொடுத்திருக்கிறார் தொகுப்பாளினி மணிமேகலை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version