ஹிந்தி சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வரும் நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான பான் இந்தியா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
நடிகை தமன்னா:
மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான நடிகை தமன்னா 34 வயதாகியும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து பல வெற்றிகளை குவித்து நட்சத்திர ஹீரோயின் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டிருக்கார்.
இப்போதும் இவரது மார்க்கெட்டும் கொஞ்சம் கூட குறையவே இல்லை. குறிப்பாக இவர் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் அடுத்தடுத்த பல வெற்றி படங்களில் நடித்து வருகிறது குறிப்பிடுத்தக்கது.
தமிழ் சினிமாவில் முதன் முதலில் தேடி திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆன நடிகை தமன்னா. இவர் வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை , படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்கள்:
மேலும், பையா, சுறா , தில்லாலங்கடி, சிறுத்தை , கோ , வீரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்கள் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .
இதனிடையே அவர் கடைசியாக ஹிந்தியில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடிப்பதோடு அங்கு படு கவர்ச்சியான ரோல்களிலும் படுக்கையறை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார் .
ஆம், அவரது நடிப்பில் வெளிவந்த வெப் தொடர்களான லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் ஜீ கர்தா உள்ளிட்ட தொடர்கள் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான தொடர்களாக பார்க்கப்பட்டது.
இந்த தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் தமன்னா நடித்திருந்தது முகம் சுளிக்க வைத்திருந்தார். இதனிடையே தமன்னா கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார் .
டார்ச்சர் செய்த சுந்தர் சி:
இப்படத்தில் சுந்தர் சியின் தங்கையாக தமன்னா நடித்திருப்பார். இந்நிலையில் சமீபத்தில் ஒன்றில் நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அரண்மனை படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார் .
அப்போது போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களையும் மற்றும் கயிறு கட்டி தலைகீழாக தொங்கிய வீடியோவையும் வெளியிட்டு, இப்படத்தில் நான் வேலை செய்தது மிகவும் சவாலாக இருந்தது.
அதே நேரத்தில் மிகவும் ஜாலியாக நாங்கள் வேலை செய்தோம். இதில் வரக்கூடிய பெரும்பாலான ஸ்டண்ட் காட்சிகளை நானே தான் பண்ணி இருக்கேன்.
குறிப்பாக யக்குனர் சுந்தர் சி பங்களாவில் என்னை தலைகீழா தொங்கவிட்டு கொடுமை படுத்தினார். அது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு அமைந்தது.
இந்த அரண்மனை 4 படத்தில் நானும் ஒரு பார்ட்டாக இருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். குறிப்பாக இந்த டீம் மிகச் சிறந்த டீம். இதைவிட ஒரு சிறப்பான டீம் எனக்கு அமையாது என தமன்னா மிகுந்த மகிழ்ச்சியோடு கூறி இருந்தார்.