பேனை விரட்டும் சீத்தாப்பழ கொட்டை.

இதயத்திற்கு இதமான பழம் இதயத்தை சீர்படுத்த கூடிய பலம் இந்த சீதாப்பழத்திற்கு உள்ளது. இந்த சீதாப்பழ கொட்டையில் பல்வேறு குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

இந்த கொட்டைகளை எடுத்து நிழலில் உலர்த்தி முதலில் பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை தேங்காய் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யை நாம் தலை முடியில் தடவி வர தலையிலுள்ள பேன்கள், ஈர்கள் மிக எளிதில் இயற்கையான முறையில் இறந்து விடும். 

இதற்கென பிரத்யேக ஷாம்புகளை நாம் வாங்கி நாம் பயன்படுத்துவதின் மூலம் நமக்கு முடி உதிர்தல் ஏற்படுகிறது. அந்த முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு இயற்கையாக இந்த சீதாப்பழம் கொட்டைகளை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு முடி உதிர்வு இல்லாமல்  பேன் போன்றவற்றின்  தொல்லையிலிருந்து நாம் விடுதலை பெறலாம். 

அதுமட்டுமல்ல இந்த சீதாப்பழ கொட்டைகள் மிக நல்ல பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது. அதனால்  இந்த கொட்டைகளை நீங்கள் மண்ணில் புதைத்து வைத்தால் உங்கள் செடி மிக நன்றாக வளர்வதோடு பூச்சிக்கொல்லிகளின்  தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறது. 

இந்த வகையான சீதாப்பழ கொட்டைகள் சிறந்த எரிவாயு அதாவது இயற்கையான எரிவாயு உற்பத்திக்கும் பயன்படுகிறது. எனவே யாரும் சீத்தாப் பழத்தை தின்றுவிட்டு தேவையில்லை என்று கொட்டைகளை எறியாமல் அவற்றை எடுத்து பொடித்து நன்கு நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் கலந்து  தலையில் தேய்த்து வர பேன் தொல்லையிலிருந்து விடுதலை பெறுங்கள்.

வேதிப் பொருட்கள் கலந்த ஷாம்புவை கொண்டு தலை முடியில் உள்ள பேன்களை விரட்ட முயற்சி செய்து ஆபத்தை விலைக்கி வாங்கிக் கொள்ளாமல் இதுபோல இயற்கை முறையை நாம் பயன்படுத்தும் போது நாம் முடிக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …