“காந்த சக்தி குவிந்து கிடக்கும் தொட்டா சிணுங்கி..!” – வியக்க வைக்கும் அற்புதமான பயன்கள்..!

தொட்டால் உடனே சுருங்கி விடுவதால் தொட்டா சிணுங்கி என்று அழைக்கப்படும். இந்த செடியை சின்ன வயதில் அடிக்கடி தொட்டு விளையாடிய ஞாபகங்கள் உங்களுக்கு இருக்கலாம்.

ஈரப்பதமான இடங்களில் அதிக அளவு காணப்படக்கூடிய இந்த தொட்டால் சிணுங்கியில் இருக்கும் அற்புத ஆற்றல்கள் மூலம் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய சின்ன சின்ன பாதிப்புகளில்  இருந்து நீங்கள் உங்களைக் தற்காத்துக் கொள்ள முடியும்.

 இந்த செடியானது 1300 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க மருத்துவத்தில் தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செடியின் இலை சாற்றை தேமல், படை உள்ள இடங்களில் தடவி வர விரைவில் குணமாகும்.

 மேலும் சிறுநீரகங்களில் இருக்கக்கூடிய கற்களை குணமாக்கக்கூடிய தன்மை கொண்டது. இந்த இலையை எடுக்கின்ற இலையின் அளவுக்கு ஏற்ற பத்து மடங்கு நீரில் அதை கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உங்களுக்கு எளிதில் வெளியேறும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொட்டா சிணுங்கி வேரை எடுத்து அதை உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து பருகினால் சர்க்கரை ரத்தத்தில் கட்டுக்குள் வரும்.

மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தக்கூடிய அற்புத சக்தி பெற்ற இந்த தொட்டா சிணுங்கி காக்கா வலிப்பு, பக்கவாதம், முகத்தில் ஏற்படும்  முகவாதம் போன்றவற்றை தீர்க்கக்கூடிய சக்தி உடையது.

 பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு நிற்காமல் நாள் கணக்கில் சென்றால் தொட்டால் சிணுங்கி இலை சாறோடு வெங்காயச்சாறு, சீரகம், எலுமிச்சம் பழம் இவற்றை கலந்து குடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

 ஆண்மை குறைபாடு உடையவர்கள் தொட்டாசிணுங்கி செடியின் இலையை அரைத்து 15 கிராம் பாலில் குடித்து வர விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

 மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டால் தொட்டாற்சிணுங்கி இலையை பச்சையாக அரைத்து அப்படியே தேய்ப்பதின் மூலம் அலர்ஜி தோல் துடிப்புகளும் குணமாகும்.

48 நாட்கள் தொடர்ந்து நீங்கள் நினைத்ததை நினைத்தபடி இந்த செடியை தொட்டு வந்தால் உள் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இதற்கு காரணம் இதில் காந்த சக்தி அதிக அளவு உள்ளதால் இதைத் தொடும் போது இதனுடைய சக்தி மனிதருள் மின்சாரம் போல பாயுமாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …