எப்போதுமே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உங்களுக்கு உதவும் சில ஆரோக்கிய டிப்ஸ்…!

ஒவ்வொரு மனிதனும் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுதல்  அவசியமான ஒன்று என்று கூறலாம். அப்படி இருந்தால் தான் நோய்கள் அண்டாமல் நம் எப்போதும் ஆரோக்கியமான முறையில்  நம் வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வாழ ஆரோக்கிய டிப்ஸ். இதைத்தான் நமது முன்னோர்கள் வருமுன் காப்பது மிகவும் சிறந்தது என்று கூறியிருக்கிறார்கள்.

💐 டிப்ஸ் 1

அன்றாட வாழ்க்கையில் நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள குறைந்தபட்சம் ஒரு 10 நிமிடம் ஆவது உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

💐டிப்ஸ் 2

அதுமட்டுமல்லாமல் காலை எழுந்ததும் காபி, டீ இவற்றை குடிப்பதை தவிர்த்து விட்டு குளிர்ச்சியான நீரை குடிப்பதின் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

💐டிப்ஸ் 3

தினமும் இரவு 10 மணிக்குள் உறங்கி அதிகாலை 4 மணிக்கு எழுவதை வழக்கமாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியம் மிளிரும்.

💐டிப்ஸ் 4

அதுபோலவே காலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் எந்நேரமும் புத்துணர்ச்சியோடு நாம் இருக்கலாம்.

💐டிப்ஸ் 5

அதுபோலவே படுப்பதற்கு முன்பு உடற்பயிற்சி செய்வதின் மூலம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை எரிக்க முடியும்.

💐டிப்ஸ் 6

உடல் ஆரோக்கியத்துக்காக நீங்கள் மாத்திரைகளை உண்ணும் போது  குளிர்ச்சிய  நீரில் பருகாமல் இளம் சூடாக இருக்கும் சுடுநீரில் பருகுவது மிகவும் நல்லது.

💐டிப்ஸ் 7

அது போல் பகல் நேரத்தில் அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.இது  ஆரோக்கியத்திற்கு வழிகோலும்.

💐டிப்ஸ் 8

மாலை 5 மணிக்கு மேல் அடிகளவு உணவை உண்ணக்கூடிய பழக்கத்தை அறவே தவிர்த்து விடுதல் நல்லது. இதன் மூலம் உங்கள் ஜீரண மண்டலத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

💐டிப்ஸ் 9

நீங்கள் சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருந்தால் அவற்றை தவிர்த்து விடுங்கள். இதனால் பாதிப்பு உங்களுக்கு தான் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

💐டிப்ஸ் 10

ஹோட்டலில் அதிகளவு விரும்பி உண்பதை விட வீட்டில் சமைக்கும் உணவை உண்பதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் பெருமளவு பேணப்படும் என்று பல ஆய்வுகள் கூறியிருக்கின்றன. அதை உணர்ந்து ஹோட்டல் உணவை தவிர்த்து விடுங்கள்.

மேற்கூறிய டிப்ஸை நீங்கள் பாலோ செய்வதின் மூலம் நிச்சயமாக உங்கள் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் உறுதியாக இருந்து செயல்படுத்த முயற்சி செய்து பாருங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version