” ஆரோக்கியம் தரும் பாதாம் ..! “நீரில் ஊற வைத்து உண்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பொதுவாகவே தற்போது இருக்கக்கூடிய இளம் தலைமுறைக்கு தனது ஆரோக்கியத்தின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வதினால் தான் பாதாம், முந்தரி போன்ற உலர் கொட்டைகளை உணவில் அதிக அளவு சேர்த்துக் கொள்வதோடு குறுந்தீனியாக பள்ளிக்குக் கொண்டு செல்லும் ஸ்நேக்ஸ் பாக்ஸில் இதை கட்டாயமாக எடுத்துச் செல்கிறார்கள்.

அந்த வகையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கும் பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து நாம் உண்பதினால் என்னென்ன பயன்கள் ஏற்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்த பாதாம் பருப்பு மூளை மற்றும் மூளை நரம்பு மண்டலங்களுக்கு சக்தியை அளிப்பதால் ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது. மேலும் தசைகளை வலுவாக்கும் திறன் மிக்கது.

என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் தினமும் இரண்டு பாதாம் பருப்பை உண்டால் போதும் என்றும் பதினாறாக நீங்கள் காட்சி அளிப்பீர்கள். இது உண்மை என்பதை அறிவியல் அறிஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த பாதாம் பருப்பில் புரதம், நார்ச்சத்து, ஒமேகா மூன்று, ஒமேகா ஆறு, விட்டமின்கள், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளது.

எனவே குழந்தைகள் இடையே காணப்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க அவசியம் குழந்தை பருவத்திலிருந்து பச்சையாக நீரில் ஊறவைத்து தோலை நீக்கிய பாதாமை உண்ண பழக்கப்படுத்துங்கள்.

 மேலும் இந்த பாதாம் பருப்பை தேனோடு கலந்து சாப்பிட்டு வர சருமத்தில் ஆரோக்கியம் ஏற்படும். தோளோடு இருக்கின்ற பாதாமை உண்ணும் போது தான் அஜீரண கோளாறுகள் ஏற்பட்டு செரிமான பிரச்சனை ஏற்படும்.

 இதனை தடுப்பதற்காகவே நீரில் ஊற வைத்து தோலை நீக்கி உண்ண வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இரவு முழுவதும் நீரில் ஊறிய பாதாம் பருப்பை நீங்கள் தோல் நீக்கி உண்பதின் மூலம் வாயுத்தொல்லையிலிருந்து விடுதலை அடையலாம்.

 உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ராலை தரக்கூடிய சக்தி இந்த பாதாம் பருப்புக்கு உள்ளது. ஊறவைத்து உண்ணக்கூடிய இந்த பாதாம் பருப்பில் வைட்டமின் பி 17 உள்ளது.

 இந்த வைட்டமின் பி17 புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய செல்களை முற்றிலும் அழிக்கக்கூடிய தன்மை கொண்டது.எனவே புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் தினமும் நான்கு முதல் ஐந்து பாதாம் பருப்பு வரை இந்த மாதிரி ஊற வைத்து உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

 மேலும் ரத்தத்தில் அதிகமாக இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இந்த பாதாம் உதவுவதாக மருத்துவர் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

 எனவே சர்க்கரை நோயாளிகளும் பயமில்லாமல் எந்த பாதாம் பருப்பை தினமும் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பாதாம் பருப்பை உண்பதின் மூலம் குழந்தையின் வளர்ச்சி அபரிமிதமாக ஏற்படுவதோடு குறை இல்லாத அளவுக்கு ஆரோக்கியம் அந்த குழந்தைக்கு கட்டாயம் கிட்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam