“வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடித்த நட்ஸ் உருண்டை..!” – ஒரு தட்டு வச்சாலும் காலியாகிடும்..!

 இன்று இருக்கும் குழந்தைகள் அதிகமாக குறுந்தீன்களை விரும்பி உண்பதால் அவர்களின் உடல் எடை கூடி  போதுமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். எதிர்காலத்தில் இவர்களது ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலையில் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யக்கூடிய வகையில் நட்ஸ் உருண்டையை வீட்டில் செய்து கொடுப்பதன் மூலம் அவர்கள் ஆரோக்கியம் பேணப்படுவதோடு  அவர்கள் எந்த உருண்டையை விரும்பி உண்ண உண்பார்கள்.

 அப்படிப்பட்ட நட்பு உருண்டையை எப்படி செய்யலாம் என்பதை இந்த சமையலில் பார்க்கலாம்.

 நட்ஸ் உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

1. முந்திரிப் பருப்பு 100 கிராம்

2. பாதாம் பருப்பு 100 கிராம்

3. வேர்க்கடலை 100 கிராம்

4. பொட்டுக்கடலை 100 கிராம்

 5.பாசிப்பருப்பு 100 கிராம்

 6.நெய் 100 கிராம்

7.உலர் திராட்சை 100 கிராம்

 8.நாட்டு சக்கரை 150 கிராம்

 செய்முறை

 மேற்குரிய அனைத்து பொருட்களையும் வாணலியில் போட்டு மிதமான சூட்டில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு மைய பொடி பொடியாக பொடித்துக் கொள்ள வேண்டும். இந்த பொடி மிகவும் நைசாக இருப்பது அவசியம்.

மேலும் பொடித்த பொடியை வேறொரு பவுலில் மாற்றி விடவும். இப்போது நாட்டு சர்க்கரையை மீண்டும் மிக்ஸி ஜாரில் போட்டு அடித்து அந்த கலவையும் பௌலில் இருக்கும் பொடியோடு சேர்த்து விடவும்.

 பின்னர் 150 கிராம் நெய்யை சூடு பண்ணி உருக வைத்து அந்த நெய்யை இந்த பவுலில் இருக்கும் பொருட்களோடு விட்டு பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாக பிடித்து எடுக்க வேண்டும்.

 இதன் பின் உலர்ந்த திராட்சை ஒன்று இரண்டை அந்த உருண்டைகளின் மீது ஒட்டி விடவும். இப்போது குழந்தைகள் விரும்பி சுவைக்கும் நட்ஸ் உருண்டை தயாராக உள்ளது.

 இந்த நட்ஸ் உருண்டை குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருவதோடு நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதால் இரும்பு சத்தத்தையும் வாரி வழங்கும். எனவே ஸ்கூலுக்கு ஸ்னாக்ஸ் கொண்டு செல்லும் குழந்தைகளுக்கு இதை கொடுத்து வருவது மிகவும் நல்லது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam