மனிதருக்கு அவரிடம் இருக்கக்கூடிய உறுப்புக்கள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமான ஒன்று. இதன் மூலம் தான் அவனது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. அந்த வகையில் கல்லீரல் – லை சுத்தமாக வைத்துக்கொள்ள நீங்கள் எந்தெந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் அதை உணவில் சேர்க்க வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.
பன்னீர் திராட்சை
பொதுவாகவே பன்னீர் திராட்சை பழம் ஆனது உடலை நன்கு சுத்தப்படுத்தக்கூடிய தன்மை உள்ளதோடு கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடிய சக்தி இந்த பன்னீர் திராட்சைக்கு உள்ளது.
மேலும் திராட்சையில் இருக்கின்ற நரின்ஜெனின் என்ற ஆன்ட்டி ஆக்சைடுகள் கல்லீரலில் இருக்கும் கொழுப்புச்சத்தை கரைக்க உதவுவதால் கல்லீரலில் படிந்திருக்கும் கொழுப்புகள் நீங்கி ஆரோக்கியமாக கல்லீரலை பாதுகாக்க உதவி செய்கிறது.
பீட்ரூட்
அதுபோலவே பீட்ரூட்டில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கான நார்ச்சத்து, மாக்னீஷ், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலின் பாதுகாப்பை இருக்கும் சுத்தப்படுத்தலுக்கும் உறுதுணையாக உள்ளது.
இது நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி உடலில் மட்டுமல்லாமல் கல்லீரலில் இருக்கும் நச்சுக்கழிவுகளை விரைவாக வெளியேற்றக்கூடிய தன்மை இருப்பதால் வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதும் மிகவும் நல்லது.
பூண்டு
மேலும் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் பூண்டில் உள்ள அலிசின், வைட்டமின் சி ,வைட்டமின் பி6, செலினியம் போன்ற முக்கிய சத்துக்கள் நச்சுக்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டுள்ளது.
மேலும் இதில் ஆண்டி ஆக்சைடுகளில் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் கல்லீரலில் இருக்கக்கூடிய கழிவுகள் விரைவில் வெளியேறும்.
வால்நட்
அந்த வரிசையில் வால்நட் உள்ளது. இது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளதால் கல்லீரல் சுரக்கின்ற என்சைம்களை தூண்டிவிட்டு உணவு செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் – க்கு கல்லீரலில் ஏற்படும் நச்சுக்களில் இருந்து பாதுகாக்க கூடிய சக்தி உள்ளது. அதிக அளவு சல்பர் இதில் இருப்பதால் கல்லீரல் உள்ள என்சைம்களை சுரக்க இது ஊக்குவிப்பதோடு கல்லீரலுக்குள் ஏற்படும் ஆபத்துக்களை தடுத்து நிறுத்துகிறது.
எனவே உங்களது உணவுகளில் வாரத்தில் ஒருமுறையாவது இந்த காய்கள், பழங்கள் மற்றும் நட் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் கல்லீரலை நீங்கள் கட்டாயம் 100% பாதுகாக்க முடியும்.