பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா.. 90ஸ் கனவுக்கன்னி ஹீராவா இது..? தீயாய் பரவும் புகைப்படங்கள்.!

சில நடிகைகளை பல ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தாலும், அடடே அந்த நடிகையா இது என்று மனசு ஆச்சரியமாக கேள்வி கேட்கும்.

ஏனெனில் அந்த காலகட்டத்தில் அந்த நடிகையை பார்த்து ரசித்த மனங்களுக்கு, பார்த்தவுடன் மனசில் ஒரு பூப்பூக்கும்.

அப்படிப்பட்ட பல கதாநாயகிகள், தமிழ் சினிமாவில் 90 களில் இருந்தனர். இப்போது அவர்களில் பலரும் காணாமல் போய் விட்டனர்.

ஏதேச்சையாக அவர்கள் நடித்த அந்த 90 படங்களை பார்த்தாலே, அவர்களது புகைப்படங்களை பார்த்தாலோ தான் சட்டென மனதில் அவரை பற்றிய எண்ணங்கள் தோன்றும்.

ஹீரா

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல படங்களில் நடித்தவர் நடிகை ஹீரா. பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

இதயம், நீ பாதி நான் பாதி, திருடா திருடி, பேண்டு மாஸ்டர், சதிலீலாவதி, காதல்கோட்டை, அவ்வை சண்முகி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பலமொழிகளில் ஹீரா நடித்திருக்கிறார்.

கவர்ச்சியில்…

ஹீரா நடித்த பல படங்களிலும் நல்ல நடிகையாக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக சில படங்களில் கவர்ச்சியில் அசத்தியிருப்பார் ஹீரா.

ஒரு கட்டத்தில் நடிகர் அஜீத்குமாருடன் ஹீரோ கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் காதலிப்பதாகவும் பேச்சு அடிபட்டது. ஏனெனில் சில படங்களில் அஜீத்குமாருடன் ஹீரா மிக நெருக்கமாக நடித்திருந்தார்.

ஆனால் அதன்பிறகு அஜீத்குமார், அமர்க்களம் படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

அதன்பிறகு நடிகர் சரத்குமாருடன் ஹீரோ நெருக்கத்தில் இருப்பதாக தகவல் பரவியது. இருவரும் விரைவில் திருமணம் செய்துெகாள்ள இருப்பதாகவும் பேசப்பட்டது.

ஆனால் சூரியவம்சம் படத்தில் நடித்த பிறகு, நடிகை ராதிகாவை சரத்குமார் 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

 

கடைசியாக சுயம்வரம்…

ஹீரா கடைசியாக நடித்தது 1999ம் ஆண்டில் வெளியான சுயம்வரம் படத்தில்தான். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீராவை பார்க்க முடியவில்லை.

கடந்த 2002ம் ஆண்டில் புஷ்கர் மாதவ் என்பவரை ஹீரா திருமணம் செய்துக்கொண்டார். அதன்பிறகு நான்கே ஆண்டுகளில் 2006ம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

இப்போது 51 வயதான நிலையில், ஹீராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலாவாக, 90ஸ் கனவுக்கன்னி ஹீராவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். அதனால் தீயாக ஹீராவின் புகைப்படங்கள் பரவுகின்றன.

ஏனெனில் இதயம் படத்தில் ஹீராவை காதலிக்கும் நாயகன் முரளி, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, குளிர் புன்னகையில் எனை சுட்ட நிலா என்று ஹீராவுக்கான காதல் பாட்டை பாடியிருப்பார்.

இப்போதும் அந்த பாடல், ஹீராவின் முகத்தை தான் பல ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்தும்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version