பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் சக்கை போடு போட்டு வரும் ஹேமா ராஜ்குமார் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு வைரலாக்கி விட்டிருக்கிறார்.
அது எப்படிப்பட்ட வீடியோ என்று நீங்கள் உள்ளுக்குள் நினைப்பது எங்களுக்கு தெரிகிறது. நீங்கள் நினைப்பது போல் அது அப்படிப்பட்ட வீடியோ இல்லை. குறிப்பாக பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் இவருக்கு ஏற்பட்ட நிலைமையை எடுத்து கூறி இருக்கக்கூடிய வீடியோ தான்.
இவர் சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமின்றி யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் முக்கியமான வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் பதிவிடக்கூடிய வீடியோக்களை பார்ப்பதற்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த யூடியூப் வீடியோவில் தற்போது இவர் பதிவிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் இவருக்கு மார்பகத்தில் ஒரு கட்டி இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகக்கியுள்ளதாகவும் கூறி இருக்கிறார்.
இதனை அடுத்து ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக செக்கப்புக்கு டாக்டர்கள் வர சொல்லியும் இவரால் கடந்த மூன்று மாதமாக செக்கப்புக்கு செல்ல இயலவில்லையாம்.
எனவே கட்டி இருந்த இடத்தில் வலி அதிகமாகி விட்டதன் காரணமாக இவர் செக்கப்புக்கு சென்று இருக்கிறார். இதனை அடுத்து பரிசோதனைகளை மேற்கொண்ட டாக்டர்கள் ஹார்மோன் சேஞ்ச் காரணமாகத்தான் தற்போது வலி ஏற்பட்டு இருப்பதாக கூறியதை அடுத்து தான் இவருக்கு மனதில் நிம்மதி பிறந்ததாம்.
இதை அடுத்து இந்த வீடியோ மூலம் உடலில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி எல்லோரும் பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது என்று அனைவருக்கும் அறிவுரை கூறும் விதத்தில் இவர் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
உண்மையிலேயே வருமுன் காப்பது சிறந்தது என்பதை புரிந்து கொண்டு இவர் போட்டிருக்க கூடிய வீடியோவிலும் இதைத்தான் இவர் தெரிவித்திருக்கிறார் என்பதை புரிந்து பெண்கள் மட்டுமல்லாமல் அனைவரும் விழிப்புணர்வோடு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொண்டால் எந்த வியாதிகளுக்கும் பை பை சொல்லி விடலாம்.