VJ சித்ரா மரணத்தில் இந்த அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது – நீதிமன்றத்தில் ஹேம்நாத் திடுக் தகவல்..!

பிரபல சின்னத்திரை நடிகை VJ சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இந்த தற்கொலைக்கு காரணம் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட கணவர் தான் என்றும்  பேசப்பட்டது. ஹேம்நாத் என்பவரை திருமணத்திற்காக நிச்சயம் செய்திருந்த நடிகை VJ சித்ரா அவருடன் திருமணத்திற்கு முன்பே ஹோட்டல் அறையில் தங்கியது அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டதும் பெரும் பரபரப்பையும் பல கேள்விகளையும் ஏற்படுத்தின.

அதனை தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்கள் VJ சித்ரா பற்றியும் அவருடைய வருங்கால கணவர் ஆக இருந்த ஹேம்நாத்-ஐ சுற்றிலும் வட்டமடித்தது. VJ சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் போது உடனிருந்த ஹேம்நாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை காவல் துறையினர் தாக்கல் செய்தனர். ஆனால், தன் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார் ஹேம்நாத். இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஹேம்நாத் தரப்பில் வாதிடும்போது சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டக்கூடிய ஒரு நபராக இருந்தார் குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்தோம் என நடிகை VJ சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளார்.

தங்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. சித்ராவை நான் தாக்கியதாக கூறுவது தவறான விஷயம். அவரது மரணம் தற்கொலைதான் என்றும் கூறப்பட்டது.

மேலும் சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும். ஆனால், அது குறித்து முழுமையாக எந்த தகவலும் எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதி எந்த அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் மீது இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றால் இந்த விவகாரத்தில் ஏன் தன்னை இந்த அளவிற்கு இழுத்து வர வேண்டும்.

சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் போது உடன் இருந்தேன் என்ற ஒரே காரணத்துக்காக என் மீது கொலைக் குற்றச்சாட்டு வரக் கூடாது. தற்கொலை செய்துகொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தெரியாது என்று ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நடிகை VJ சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என கூறி ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றத்தில் விசாரணை எதிர்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …