“உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லையா..! உங்க ஹீமோகுளோபின்-ஐ அதிகரிக்கும் உணவுகள்..!

பெரும்பாலான இந்திய பெண்களிடம் ஹீமோகுளோபின் அளவு குறைந்து காணப்படுவதால் அவர்களுக்கு அனிமிக் என்று அழைக்கப்படக்கூடிய ரத்த சோகை நோய் ஏற்படுகிறது.

 குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிகளுக்கு இந்த நிலை அதிக அளவு தொடர்வதால் இதை சரி செய்வது கட்டாயம் அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ரத்தத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் என்ற சிவப்பு அணு ஒரு புரதம்.

 இது தான் நுரையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவி செய்கிறது. எனவே உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்க கூடிய ஆற்றல்  அற்புத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு  ரத்த சோகை இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்கலாமா?

அதற்கு முன் இரத்த சோகையினால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் என்னென்ன என்று பார்த்து விடலாம். பொதுவாகவே இரத்த சோகை இருப்பவர்களுக்கு அதிக அளவு சோர்வு ஏற்படும்.கூடவே மூச்சுத் திணறல், தலை சுற்றல், தலைவலி, மார்பு வலி இதய பாதிப்புகள் ரத்த சோகையினால் ஏற்படுவதால் ரத்த சோகையை தடுக்கக்கூடிய உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் இதை நம்மால்  தடுக்க முடியும்.

 ரத்த சோகையை விரைவில் போக்கும் உணவுகள் ஆட்டின் மண்ணீரலை வாரம் இரு முறை எடுத்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை வேகமாக அதிகரிக்க கூடிய தன்மை இருப்பதால் விரைவில் ரத்த சோகையானது முடிவுக்கு வரும். இதை பொதுவாக சுவரொட்டி என்று கூறுவார்கள்.

முருங்கைக் கீரையை நீங்கள் தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி சாப்பிடும் போது உங்களுக்கு அனிமியா ஏற்படாது. மேலும் வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் இந்த முருங்கைக் கீரையை ஏதேனும் ஒரு வகையில் உங்கள் உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். முருங்கைக் கீரையை சூப் செய்து குடிப்பதும் உடலுக்கு மிகவும் நல்லது.

அடுத்ததாக ஏ பி சி என்று அழைக்கப்படக்கூடிய ஜூஸினை ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீங்கள் குடிக்க வேண்டும். இதில் ஏ என்பது ஆப்பிளையும் b என்பது பீட்ரூட்டையும் சி என்பது கேரட்டையும் குறிக்கிறது. இந்த மூன்று பொருட்களையும் நீங்கள் ஒரு மிக்ஸி ஜாரில் அடித்து குடிப்பதின் மூலம் மிக விரைவில் ரத்த ஓட்டம் உங்களுக்கு அதிகரிக்கும்.

கருப்பு உலர் திராட்சையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட உங்களது ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு ரத்தம் ஊறும். அது போலவே பேரிச்சம் பழத்தையும் தொடர்ந்து நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

மலை நெல்லிக்காயில் இருக்கக்கூடிய அற்புதமான சக்தி உங்கள் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். மலை நெல்லிக்காய் ஒன்று ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை எடுத்துக்கொண்டு அதை மிக்ஸி ஜாரில் நன்றாக அடித்து இரண்டு டம்ளர் தண்ணீரை விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இந்த நீரை பருகுவதின் மூலம் ரத்தம் ஊறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவு அதிகரிக்கும்.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் சைவ உணவை மட்டுமே உண்பவர்கள் என்றால் சுவரெட்டியை தவிர்த்து மற்ற உணவோடு மாதுளை, பாலக்கீரை வால்நெட்டுகளை சேர்த்து வந்தாலே போதுமானது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …