வீட்டுத் தோட்டத்தில் மூலிகை வளர்த்து அரசின் மானியம் ₹ 750 பெறுங்க..!!

 இன்று பிரபலமாக அனைவரும் வீடுகளில் மாடித்தோட்டம் மற்றும் தோட்டங்களை அமைத்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் வீட்டிலேயே பயிரிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் நீங்கள் இனி உங்கள் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்கலாம் .அப்படி நீங்கள் மூலிகை தோட்டம் அமைப்பதின் மூலம் உங்களுக்கு அரசு மானியமாக ரூபாய் 750-ம் கிடைக்கும்.

 இந்தத் திட்டத்தை தமிழகத்தில் இருக்கக்கூடிய தோட்டக்கலைத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு மானிய தொகையாக ரூபாய் 750 வழங்கப்படுகிறது.

 இதன் மூலம் வேளாண் தொழிலை மேம்படுத்தக்கூடிய நோக்கில் இந்த சலுகைகளை தோட்டக்கலை அறிவித்துள்ளது. இதில் நீங்கள் உங்கள் வீட்டில் மூலிகை செடிகளான துளசி, கற்பூரவள்ளி, திப்பிலி, ஆடாதோடா அஸ்வகந்தா, பிரண்டை வல்லாரை போன்ற பத்துக்கும் மேற்பட்ட செடிகள் வழங்கப்படுகிறது.

 அதுமட்டுமல்லாமல் எந்த செடிகளை வளர்க்க வளர்ப்பு பைகள், தேங்காய் நார், மண்புழு உரம், கையேடு உள்ளிட்ட மொத்தமும் வழங்கப்படும் இதற்கான மொத்த செலவு ரூபாய் 1500 ஆகும்.

நீங்கள் இந்தத் தொகையில் பாதித் தொகையை செலுத்தினால் மீறி மானியமாக உங்களுக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி நீங்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பினால் www.tnhorticulture.tn.gov.in  இந்த வலைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

 இதன் மூலம் நீங்கள் கூடுதல் தகவல்களைத் பெற முடியும். எனவே காய்கறிகள் மட்டுமல்லாமல் இதுபோன்று மூலிகை செடிகளையும் வளர்ந்து உங்கள் வீட்டில் இருந்தே உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

 எனவே தாமதம் செய்யாமல் உடனடியாக மூலிகை தோட்டம் அமைக்கக்கூடிய பணியில் நீங்கள் இறங்கலாம். இதற்கு அரசும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பதால் மிக எளிதாக உங்களால் எதை செய்து முடிக்க முடியும்.

எண்ணற்ற எந்த மூலிகை செடிகள் உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருப்பதன் மூலம் அவற்றை உங்கள் உணவோடு சேர்த்து உண்பதின் மூலம் மருந்தில்லா  ஆரோக்கியத்தை உங்களால் பேண முடியும்.

 அதுமட்டுமல்லாமல் உணவே மருந்தாக மாறி விடுவதால் உங்களால் 100% ஆரோக்கியத்தை உங்கள் வீட்டில் அவர்களுக்கு அளிக்க முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …