வீட்டுத்தோட்டத்தில் இந்த செடிகளை வளர்த்து பாருங்க..! – உங்களை ஜெயிக்கவே முடியாது..!

பொதுவாகவே வீட்டுத்தோட்டம் என்றால் அதில் காய்கறிகளை மட்டும் வளர்த்தால் போதும் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த காய்கறிகளின் ஊடே எப்படி நாம் பூ செடிகளையும் வைத்து பேணிப் பாதுகாக்கிறோமோ அதுபோல அன்றாட ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய..

அதே சமயம் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள்.. தீய சக்திகளின் தாக்கங்கள் ஆகியவற்றை குறைத்து அதன் சக்தியை மட்டுப்படுத்தி உங்களுடை முயற்சிகள் வெற்றியடைய வழி வகுக்கும் சின்ன சின்ன மூலிகை செடிகளையும் நாம் வளர்த்து வருவதன் மூலம் நமது வெற்றியை பெறுவது மட்டுமில்லாமல் நம் வீட்டின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற மூலிகைகள்:

 வீட்டுத் தோட்டத்தில் பயிரிடக்கூடிய சில மூலிகைகள் உள்ளது. இந்த மூலிகைகளை நாம் வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மருத்துவர்களிடம் சென்று மருந்துகளை வாங்கி உண்பதற்கு பதிலாக மூலிகைச் செடிகளில் இருந்து கிடைக்கக்கூடிய எண்ணற்ற பலன்களை நமது உடலுக்கு பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும்.

 அந்த வரிசையில் பொன்னாங்கண்ணி கீரையை நாம் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து வாரம் ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ இதை உணவில் பொறியலாக செய்து உண்ணும் போது கண்ணில் ஏற்படும் பார்வை கோளாறுகளை சரிப்படுத்தக் கூடிய ஆற்றல் எந்த கீரைக்கு உள்ளது.

கிராமப்புற பகுதியில் வயல் வெளிகளில் அதிக அளவு காணப்படக்கூடிய இந்த கீரை கொடியை எடுத்து வந்து அப்படியே சிறு சிறு துண்டுகளாக்கி நாம் நட்டு வளர்ப்பதின் மூலம் நமக்கு இது எளிதாக வளர்ந்து பலனைத் தரும்.

இதனை அடுத்து ஒரு தொட்டியில் துளசி செடியை நட்டு வளர்ப்பதின் மூலம் தினமும் காலை ஒரு எனக்கு துளசியை உண்பதின் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சளி தொல்லையில் இருந்தும் விடுதலை பெறலாம்.

இந்தச் செடியை பராமரிக்கக் கூடிய பணிகள் அதிக அளவு இல்லை போதுமான அளவு நீரை விட்டு வளர்த்தி வந்தாலே போதுமானது.மேலும் தூதுவளை போன்ற செடிகளையும் வளர்க்கலாம்.

இந்த செடிகளை வளர்ப்பது மூலம் தினமும் தூதுவளை தொகையல் அல்லது பிரண்டை சட்னியை வாரத்திற்கு ஒரு நாள் உண்பதின் மூலம் செரிமான கோளாறுகள் ஏற்படாமல் பசியை தூண்டக்கூடிய ஆற்றல் கொண்டது.

அதுமட்டுமல்லாமல் தூதுவளை செடியை ரசமாக வைத்து குடிப்பதன் மூலம் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …