இதை பாத்துட்டு பிரேம்ஜிக்கு பொண்ணே கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்.. மாமியார் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கும் நடிகர்களுக்கு என்று ஒரு தனி ரசிக்கப்பட்டாளம் உண்டு. உதாரணத்திற்கு நடிகர் சிம்புவிற்கு அதிக ரசிகர்கள் இருக்க முக்கிய காரணமே அவர் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதுதான்.

ஆரம்பத்தில் சிம்பு சினிமாவிற்கு வந்த போது நிறைய பெண்களை குற்றம் கூறி திரைப்படங்களை எடுத்து வந்தாலும் கூட அதற்குப் பிறகு அந்த மாதிரியான திரைப்படங்களை அவர் இயக்கவில்லை. இருந்தாலும் சிம்பு இன்னமும் சிங்கிளாகதான் இருந்து வருகிறார்.

பிரேம்ஜி திருமணம்:

சிம்பு மட்டுமன்றி அவருக்கென்று ஒரு நண்பர்கள் குழு சினிமாவில் உண்டு சிம்புவுடன் சேர்ந்து வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் மாதிரியான சில நடிகர்கள் ஒன்றிணைந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த குழுவில் இன்னொரு திருமணம் செய்து கொள்ளாத நபராக இருந்தவர் நடிகர் பிரேம்ஜி.

வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி சென்னை 28 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்களில் எல்லாம் காமெடி நடிகராக பிரேம்ஜி நடித்து வந்தார். இந்த நிலையில் 40 வயதை கடந்த பிறகும் கூட பிரேம்ஜி திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

இதனாலேயே இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. சமீபத்தில்தான் பிரேம்ஜி இந்து என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் சிம்பிளாகதான் நடத்தப்பட்டது. அவர் சிங்கிளாக இருந்த காலங்களில் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் ஏடாகூடமாக ஏதாவது பேசி விடுவார்.

மாமியார் சொன்ன விஷயம்:

அது அதிகமாக டிரெண்டாகிவிடும் அந்த விஷயத்தாலேயே அவருக்கு பெண் கொடுக்க யோசனையாக இருந்தது என்று அவரது மாமியார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும்போது ஆரம்பத்தில் பிரேம்ஜியின் பேட்டிகளை பார்த்த பொழுது அவருக்கு பெண்ணே கொடுக்கக் கூடாது என்று நான் நினைத்தேன்.

ஆனால் நிஜத்தில் பார்க்கும் பொழுது அவர் மிகவும் தங்கமான மனிதராக இருந்தார் பிரேம்ஜி. பிரேம்ஜியிடம் பிடித்த விஷயமே அவர் எப்பொழுதும் பெரியவங்களை ரொம்ப மதிப்பா நடத்துவார். என் வீட்டில் ஏதாவது வேலை செய்யும் பொழுது என்னுடைய மகள் எனக்கு ஏதாவது வேலை சொல்வார்.

ஆனால் பிரேம்ஜி உடனே அவங்களை எதுக்கு வேலை செய்ய சொல்ற என்று கோபப்படுவார் அந்த அளவிற்கு தங்கமானவர். அவர் எனக்கு இன்னொரு மகன் மாதிரி என்று கூறியிருக்கிறார் அவரது மாமியார் ஷர்மிளா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version