“சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரம்..!” – வரலாற்றை தெரிந்து கொள்ளலாமா?

தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் அன்று உத்திர நட்சத்திரம் வரக்கூடிய நாளில் தான் பங்குனி உத்திரம் படு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படக்கூடிய இந்த பண்டிகை முருகனுக்கு உகந்த பண்டிகையாகும். இந்த பண்டிகையின் வரலாறு என்ன என்பதை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாமா.

பங்குனி உத்திரம் வரலாறு

அசுரர்களின் கொட்டத்தை அடக்கிய மாதம் தான் இந்த பங்குனி மாதம் ஆகும். முருகப்பெருமான்  அசுரர்களின் அனைத்து விதமான செயல்களையும் கட்டுப்படுத்தி அவர்களை அழிக்கின்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறார்.

அந்த அசுரர்களை அழிப்பதற்காக தன் தாய் தந்தையரை வணங்கி முருகப்பெருமாள் குதிரை பூட்டிய தேரில் வாயு பகவானை சாரதியாக கொண்டு பல்லாயிரக்கணக்கான படைகள் அணிவகுத்து செல்ல இவரும் அந்தப் படைகளை முன்னெடுத்துச் சென்றார்.

அந்த சமயத்தில் முருகப்பெருமானின் படைகளை வழிமறிக்க காரணம் யார் என்று அறியாமல் அனைவரும் திகைத்து இருக்கிறார்கள். அப்போது நாரதர் முருகப்பெருமானிடம் அகத்திய முனிவரின் சாபத்தால் அசையாமல் மலையாகி நிற்கக்கூடிய இந்த அசுரனை நாம் கடந்து சென்றால்தான் சூரபத்மன் தம்பி இருக்கும் இடத்தை அடைய முடியும் என்று கூறுகிறார்.

யானை முகம் கொண்ட சூரபத்மனின் தம்பியான தாரகாசுரன் மாயாபுரி பட்டணத்தில் ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு பக்க பலமாக இந்த மலை விளங்குகிறது.

இதனை அடுத்து முருகனின் கட்டளைக்கு இணங்க மாயாபுரி பட்டணத்துக்குள் முருகனின் படை நுழைய தாரகாசுரருக்கும் வீர பாகுவுவுக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது.

இந்த சண்டையில் தாரகாசுரன் வீரபாகுவை  மயக்கம் அடைய செய்து விட்டார். எனினும் மயக்கம் கலந்து எழுந்த வீரபாகு மூர்க்கத்தனமாக தாரகாசுரனை தாக்குகிறான்.

இந்த தாக்குதலை தாங்க முடியாத தாரகாசுரன் எலியாக மாறி கவுஞ்சி மலைக்குள் சென்றார். வீரபாகுவும் அவர்களை தொடர்ந்து உள்ளே செல்ல மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.

 முருகனின் பெரும்படையை தொம்சம் செய்த அசுரப்படை முருகனை கிண்டல்  செய்ய, நிலைமையை அறிந்து கொண்ட முருகன் போர்க்களத்திற்கு நேரடியாக வருகிறார்.

இப்போது முருகப் பெருமானின் தாக்குதலை தாங்க முடியாமல் எலியாக மாறி மலைக்குள் நுழைய முயலும் போது முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை வீசி மலையை சுக்குநூறாக உடைத்து எரிந்து தாரகாசுரனை கொன்று விடுகிறார்.

 இதனை அடுத்து இவர் தெய்வானையை திருமணம் செய்து கொள்கிறார். இந்த நாளை தான் பங்குனி உத்திரத் திருநாளாக கொண்டாடுகிறோம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …