” உங்கள் வீட்டுத் தோட்டம் அழகாக இருக்க வேண்டுமா…!” – இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்க..!!

எலி வங்கு என்றாலும் தனிவங்கு வேண்டும் என்று கூறுவார்கள். அது போல நமக்கு என்று ஒரு வீட்டை உருவாக்கி விட்டவர்கள் அனைவருமே வீட்டுத் தோட்டத்தை பராமரிப்பதற்கும் அதை உருவாக்குவதற்கும் திட்டங்களை போடுவார்கள்.

 அப்படி உங்களது வீட்டுத் தோட்டம் அழகாக இருக்க வேண்டும் என்றால் எந்தெந்த நிலையில் நீங்கள் அதை செயல்படுத்த வேண்டும் என்பதற்கான குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 வீட்டுத் தோட்டத்தில் குறிப்பாக அனைவருமே ஏராளமான பூக்களை தரும் பூச்செடிகளையும்  வீட்டுக்கு தேவையான காய்கறி செடிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணக்கூடிய மூலிகை செடிகளை தான் தற்போது வளர்த்தி வருகிறார்கள்.

 அந்த வரிசையில் நீங்கள் முதலில் சரியான இடத்தை தேர்வு செய்து கொண்ட பிறகு தான் இது போன்ற செடிகளை நீங்கள் வளர்க்க முடியும். எனவே சரியான இடத்தை முதலில் தேர்வு செய்வதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 மேலும் அந்த இடமானது தோட்டம் அமைப்பதற்கு உரிய சூழலில் இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை அடுத்து  செடிகள் நன்கு வளரவும் சூரிய ஒளி அந்த இடத்தில் படும்படி இருத்தல் நலம் தரும்.

 எனவே சூரிய ஒளி படுகின்ற இடத்தை தேர்வு செய்வது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும். தோட்டத்துக்கு தேவையானது மிக முக்கியமானது நீர் வளம் தான் இந்த நீர் வளம் நீங்கள் தேர்ந்தெடுக்க கூடிய அந்த இடத்தில் எப்படி கொண்டு செல்லலாம் என்பதை திட்டமிட்டு செய்யலாம்.

 அவ்வாறு செய்வதின் மூலம் செடிகளுக்கு தேவையான தண்ணீரை எளிமையாக உங்களால் கொடுக்க முடியும். இதனை அடுத்து செடிகள் நன்கு வளர வளமான மண்ணை தேர்வு செய்ய வேண்டும்.

 எனவே சத்து நிறைந்த மண்ணில் உங்கள் தோட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள். மேலும் மண்ணுக்கு தேவையான சத்தை பெறுவதற்காக இயற்கை உரங்களை போட்டு செடிகளை நன்கு நீங்கள் வளர்க்கலாம்.

குறிப்பாக சமையல் அறையில் கிடைக்கும் தாவரக் கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி செடிகளுக்கு அடி உரமாக நீங்கள் போடுவதின் மூலம் உங்கள் மண்ணில் சத்து அதிகரிக்கும். மேலும் நீங்கள் தேர்வு செய்யக்கூடிய தாவரமானது உங்கள் வீட்டில் மற்றும் சுற்றுச்சூழலில் தாக்குப்பிடித்து வளரக்கூடிய தாவரங்களை தேர்வு செய்து நீங்கள் நட்டு வளர்க்கலாம்.

 மேலும் அந்தத் தாவரத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இயற்கை முறையில் நீங்கள் கொடுத்து பராமரிப்பதன் மூலம் உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் ஆரோக்கியத்தை தரும் மூலிகைகளை நீங்கள் பெற முடியும்.

 வாரத்தில் ஒரு நாளாவது நீங்கள் தோட்டத்தை சரியாக பராமரிக்க வேண்டும் களைச் செடிகளை எடுப்பது போதுமான அளவு நீர் இணை விடுவது மண்ணினை அடிக்கடி பரிசோதித்துப் பார்த்தல் போன்றவை முக்கியமானது.

 மேலும் பூச்சிகளால் செடிகள் ஏதேனும் தாக்கப்பட்டு இருந்தால் தக்க சமயத்தில் பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டும் இது போன்ற டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்வதால் உங்கள் வீட்டு தோட்டம் பார்ப்பதற்கு படு சோராக இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam