வீட்டுத் தோட்டத்தில் பூச்சிகள் தொல்லை அதிகம் உள்ளதா..? – அப்போ இதை பண்ணுங்க..!

இன்று அனைவருமே வீட்டு மாடிகளிலும், வீடுகளில் இருக்கும் சின்ன இடங்களிலும் தோட்டங்களை அமைத்து வீட்டு தோட்டங்களை பராமரித்து வருகிறார்கள். மேலும் இந்தத் தோட்டத்தில் எண்ணற்ற காய்கறி செடிகள், பூ செடிகள் போன்றவற்றை அவர்கள் வளர்த்து வருகிறார்கள்.

இதில் ஏற்படக்கூடிய பூச்சிகளின் பாதிப்பை வீட்டில் இருந்து நாம் செய்யக்கூடிய இயற்கை பூச்சி கொல்லிகளை கொண்டு மிக எளிதில் விரட்ட முடியும். அப்படிப்பட்ட எளிய வீட்டில் செய்யப்படக்கூடிய பூச்சிக்கொல்லிகளை பற்றி எந்த கட்டுரையில் காணலாம்.

1.இஞ்சி, பூண்டு, மிளகாய் பூச்சிக்கொல்லி

 வீட்டில் நாம் வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு, மிளகாய் இவற்றைக் கொண்டு இயற்கையான ஒரு பூச்சிக்கொல்லியை நாம் தயாரிக்க முடியும். அதற்காக நீங்கள் அரை கிலோ பச்சை மிளகாய் அரை கிலோ இஞ்சி சிறிதளவு பூண்டு இவற்றை தனித்தனியாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இந்த விழுதினை இரண்டு முதல் ஆறு லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த கரைசலை உங்கள் காய்கறி செடி மற்றும் பூ செடிகளில் தெளிப்பதின் மூலம் பூச்சி தாக்குதல்களை தடுக்க முடியும்.

2.கதர் சோப் பூச்சிக்கொல்லி

ஒன்று அல்லது இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒன்று இரண்டு கதர் சோப்பை அப்படியே போட்டு கரைய விடுங்கள். இந்த கலவை நன்றாக கரைந்த பின் அந்த கரைசலை நன்றாக கலக்கிவிட்டு பின்பு உங்கள் தோட்டத்தில் இருக்கும் செடிகளில் தெளிக்கலாம். இதன் மூலம் செடிகளில் இருக்கும் புழு வகைகளும் பூச்சி வகைகளும் அழிந்து போகும்.

3.வேப்ப எண்ணெய்,வேப்பிலை சாறு பூச்சிக்கொல்லி

100 மில்லி வேப்ப எண்ணையை நீங்கள் ஒரு லிட்டர் எண்ணெய் தண்ணீரில் நன்றாக கலக்கி விட வேண்டும். இத்தோடு முடிந்தால் வேப்பிலையை அரைத்து அந்தச் சாறை இந்த கலவையில் ஊற்றி விடலாம்.

 இவ்வாறு தயார் செய்திருக்கும் கரைசலை உங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் காய்கறி செடிகள் மற்றும் பூ செடிகளின் மீது தெளிப்பதினால் பூச்சி தாக்குதல் மட்டுப்படுவதோடு விரைவில் பூச்சிகள் சாகும்.

 மேற்கூறிய இந்த மூன்று பூச்சிக்கொல்லிகளும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் என்பதால் அதை உங்கள் வீட்டிலேயே தயாரித்து உங்கள் வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவு தராத காய்கனிகளையும் பூக்களையும் நீங்கள் பெற முடியும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam