“இல்லத்தரசிகளுக்கு யூஸ் ஃபுல்லான சில சமையல் டிப்ஸ்..!” – வேலைய ஈசியா பண்ணுங்க..!

எல்லாம் கலைகளையும் விட அற்புதமான கலையாக இந்த சமையல் கலையை கூறலாம். பலரது பசியை போக்கக்கூடிய இந்த சமையல் கலையை எளிமையாக செய்ய சில டிப்ஸ்கள் உள்ளது. இந்த டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்கள் சமையல் வேலையை மிகச் சுலபமாக முடித்து விடுவதோடு மட்டுமல்லாமல் சுவையாகவும் நீங்கள் தருகின்ற உணவுப் பொருட்களை தர முடியும்.

அப்படிப்பட்ட சில சமையல் டிப்ஸ் இந்த கட்டுரையில் நீங்கள் படித்து பயன் தரலாம்.

சமையல் டிப்ஸ் 1

நீங்கள் பூரி செய்ய மாவு பிசைந்தால் அந்த பூரி உப்பி வர வேண்டும் என்றால் கட்டாயம் நீங்கள் சர்க்கரை சிறிதளவு சேர்த்து பிசைந்தால் உப்பி வரும் மேலும் அப்படியே சில நிமிட நேரம் இருக்கும்.

சமையல் டிப்ஸ் 2

உங்கள் வீட்டில் பாலை பிரை விடும் போது தயிர் எப்போதும் புளித்துப் போகிறது என்று கவலை இருந்தால் நீங்கள் அந்த பாலோடு அல்லது தயிர் முறையாகும் பொருளோடு தேங்காயை போட்டு வைத்தால் போதும் தயிர் சீக்கிரம் புளிக்காது.

சமையல் டிப்ஸ் 3

ஏலக்காயை பொடிக்கும் போது சிறிதளவு சர்க்கரையை சேர்த்து பொடித்தால் ஏலக்காய் மிக சீக்கிரத்தில் பொடிந்து விடும்.

சமையல் டிப்ஸ் 4

கீரையை கடையும்போது கீரையின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் சிறிதளவு எண்ணெயை விட்டு வேக வைத்தால் போதுமானது அப்படியே பச்சை நிறத்தோடு கீரை இருக்கும்.

சமையல் டிப்ஸ் 5

புளி குழம்பு செய்யும் போது சிறிதளவு வெந்தயத்தை நுணுக்கி போட்டீர்கள் என்றால் சுவை கூடுதலாக இருக்கும் இதை தாளிக்கும் போதும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

சமையல் டிப்ஸ் 6

உங்கள் வீட்டில் சமையல் அறையில் சர்க்கரை பாத்திரத்தில் எறும்பு வராமல் இருக்க இரண்டு கிராம்புகளை போட்டு வைத்தால் போதும் எறும்பு சர்க்கரையின் பக்கமே வராது.

சமையல் டிப்ஸ் 7

முருங்கைக்காய் உங்கள் வீட்டில் அதிகமாக இருந்தால் அதை உங்கள் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யும் போது காசு புகாத கவர் அல்லது டப்பாவில் வெட்டிப் போட்டு விட்டால் ஒரு வாரம் வரை நீங்கள் இந்த முருங்கைக்காயை பயன்படுத்த முடியும்.

சமையல் டிப்ஸ் 8

நீங்கள் சமைக்கும் சாதம் வெள்ளையாகவும் உதிரி உதிராகவும் இருக்க அரிசியை ஊற வைக்கும்போது ஐஸ் கட்டிகளை சேர்த்து ஊற வைத்தால் அரிசி உதிரி உதிராக வரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …