“வெயிலுக்கு முகத்தில் சூட்டு கொப்புளங்கள் வந்திருக்கிறதா..!” அப்ப இப்படி செய்யுங்க..!

பொதுவாகவே கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கொப்புளங்கள் ஏற்படுவது இயல்பான விஷயம்தான். இந்த கொப்பளங்கள் உங்கள் முகத்தில் ஏற்படும் போது அது வடுவாக மாறி உங்கள் முக அழகை அவலச்சனமாக மாற்றிவிடும்.

அப்படி உங்கள் முக அழகை மாற்றி விடக் கூடிய இந்த கொப்பளங்களை எளிய முறையில் எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முகத்தில் ஏற்படும் சூட்டு கொப்புளங்களை சரி செய்யக்கூடிய முறைகள்

உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் கொப்புளங்களை வடே ஏற்படாமல் சரி செய்ய நீங்கள் கொப்புளம் உள்ள பகுதியில் சூடான நீரைக் கொண்டு 20 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கலாம். இதனை தினமும் நான்கு அல்லது ஐந்து முறை செய்வதின் மூலம் கொப்பளம் எளிதில் மறைந்து போகும்.

டீட்ரீ எண்ணெய் சந்தைகளில் அதிக அளவு கிடைக்கும். இந்த எண்ணெயை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கொப்பளங்கள் எளிதில் நீங்கும். மேலும் இந்த எண்ணெயோடு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சில துளிகள் சேர்த்து உங்கள் கொப்பளங்களில் மேல் வைத்து விடுங்கள். இரவு உறங்கும் போது இது போல நீங்கள் செய்வதினால் உங்கள் கொப்புளங்கள் எளிதில் மறைந்து கருப்பு நிற வடு ஏற்படாது.

அதிகளவு கொப்பளங்கள் இருக்கக்கூடிய பட்சத்தில் மஞ்சள் தூளோடு நீரை கலந்து பேஸ்ட் போல உங்கள் முகம் முழுவதும் போட்டு விடுங்கள். இதனை அடுத்து அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் நீங்கள் முகத்தை கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய கொப்புளங்கள் எளிதில் போகும்.

பாரம்பரியமான வேப்ப எண்ணெய் நுண்ணுயிரிகளை எதிர்க்கக்கூடிய ஆற்றல் இருப்பதோடு பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய பண்புகளைக் கொண்டிருப்பதால் உங்கள் முகத்தில் இருக்கும் கொப்புளங்களின் மீது தினமும் வேப்பெண்ணையை வைப்பது மூலம் கொப்பளத் தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

சனிக்கிழமை தோறும் நாம் பயன்படுத்தும் திருநாமக் கட்டியை நீரில் குழைத்து உங்கள் முகம் முழுவதும் பூசி கொப்புளங்கள் இருக்கும் இடத்திலும் பூசி வருவதின் மூலம் கொப்பளத்தில் இருக்கும் வீக்கம் நீர் போன்றவை வற்றி விரைவில் குணமாகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …