“உங்க உடம்பில கொழுப்பு திசுக்கட்டி இருக்கா..!” Don’t Worry… ஈசியா கரைக்க எளிய வீட்டு வைத்தியம்..!!

பொதுவாக உடலில் கொழுப்புகள் அதிகமாக தேங்கும் பொழுது இந்த கொழுப்பு திசுக்கட்டிகள் உருவாகிறது. எனவே உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கும் மட்டும்தான் இந்த கொழுப்பு கட்டிகள் வரும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம்.

 ஒல்லியான உடல்வாகை கொண்டு இருப்பவர்களுக்கும் இந்த கொழுப்பு கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதற்கு காரணம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு கரைக்கப்படாமல் அப்படியே இருப்பதனால் தான் இது உருவாகிறது.

 வலியற்ற நிலையில் இருக்கும் இந்த கொழுப்புக் கட்டிகள் குறிப்பாக  பெண்களின் மார்பு பகுதி, கை, கால், தொடை, அக்குள், வயிறு போன்ற இடங்களில் உருவாகும்.

 ஒரு சிலர் இதைப் பார்த்து கேன்சர் கட்டியோ என்று பயப்படுவார்கள். அப்படிப்பட்ட இந்த கொழுப்பு கட்டிகளை எளிய முறையில் எப்படி கரைக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

கொழுப்புக் கட்டிகளை எளிதில் குறைக்க  வீட்டு வைத்தியம்

👍நீங்கள் எப்போதும் இளம் சுடுநீரில் இருக்கும் நீரை பருகி வருவதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய அபரிமிதமான கொழுப்பு கரைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே வெந்நீர் குடிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

 👍அவ்வாறு வெந்நீரை வைத்து குடிக்கும் போது ஒவ்வொரு நாளும் நீங்கள் சீரகம், சோம்பு, கருஞ்சீரகம் என மாறி மாறி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். நீங்கள் அசைவ உணவை எடுத்துக் கொள்ளும்போது இந்த வெந்நீரை குடித்து வருவதன் மூலம் கொழுப்பு கட்டி கரைவதோடு உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.

 👍தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை அப்படியே சுளையாக கொட்டைகளை நீக்காமல் நீங்கள் சாப்பிடும் போது அதிக அளவு இருக்கக்கூடிய கொழுப்புக்களை கரைக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளது.

👍 மேலும் சில கொழுப்புக் கட்டிகள் பெரிதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உப்பை ஒரு காட்டன் துணியில் நன்றாக கட்டி உப்புக்கிழி என்று கூறுவார்கள்,இதில் உப்பு ஒத்தடம் கொடுக்கும்போது அந்த இடத்தில் இருக்கக்கூடிய கொழுப்பு அந்த சூட்டில் மெதுவாக கரைந்து விடும்.

👍 தினமும் இரண்டு வேளை உப்புக் கிழியை அடித்து ஒத்தடம் கொடுக்கும் பொழுது கொழுப்புகள் விரைவில் நீங்கும். மேலும் என்ன தான் உணவின் மூலம் நீங்கள் கொழுப்பை கரைத்தாலும் மேலும் உணவின் மூலம் கொழுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதால் தினமும் குறைந்தபட்ச அரை மணி நேரமாவது நீங்கள் உடற்பயிற்சியில் மேற்கொள்வதன் மூலம் கொழுப்புகளை மேலும் தங்க விடாமல் பாதுகாக்க முடியும்.

மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கும் போது நல்ல பலன் கிடைக்கும் அப்படி கிடைத்தால் நீங்கள் எங்களோடு அதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …