உங்க உடம்பில் வெண்புள்ளி இருக்கா? – அப்ப அது மறைய இந்த வீட்டு வைத்தியம் யூஸ்சாகும் பாஸ்..!

உங்கள் உடலில் வெண்புள்ளிகள் அங்கங்கே தெரிகிறதா? இதற்காக என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். சருமத்தை பராமரிப்பு செய்தும் இது போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதால் உடலில் ஆங்காங்கு வெண்ணிற புள்ளிகள் தோன்றும் மேலும் இது பார்ப்பதற்கு தேமலை ஒத்திருக்கும்.

இது முறையற்ற உணவுப் பழக்கமும், ஊட்டச்சத்து பற்றாக்குறையும் இந்த வெண் புள்ளிகள் தோன்றுவதற்கு முக்கியமான காரணமாக நாம் கூறலாம். நீங்கள் வெண்புள்ளிகளை அலட்சியமாக விட்டுவிட்டால் அது அப்படியே பல்கிப் பெருகிவிடும்.

இத்தகைய வெண்புள்ளிகள் அதிகம் பரவாமல் தடுக்க குறைந்த செலவில் நமது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே வைத்தியம் செய்து கொள்ளலாம்.

மேலும் நமது முன்னோர்கள் கடைபிடித்த இந்த முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் அந்த வெண் புள்ளிகளை குணமாக்கி விடலாம்.

வெண்புள்ளிகளை தடுக்கக்கூடிய வீட்டு வைத்திய பொருட்கள்

பொதுவாக இந்த வெண் புள்ளிகள் ஆனது முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளில் அதிக அளவு காணப்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், வைட்டமின் பி12 பற்றாக்குறையால் அவதிப்படுபவர்களுக்கும் உடல் குண்டாக இருப்பவர்களுக்கும் இந்த பிரச்சனை விரைவில் ஏற்படும்.

இதற்கு கற்றாழை மடலை இரண்டாக வெட்டி வெள்ளை நிற ஜல்லை எடுத்து அந்த வெண் புள்ளிகள் மேல் தொடர்ந்து தேய்த்து மசாஜ் செய்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஊற விட்டு பிறகு குளிப்பதன் மூலம் வெண்புள்ளிகள் மறையும்.

 வேப்பிலையோடு மஞ்சளை சேர்த்து அரைத்து கட்டியாக பசும் தயிரில் குழைத்து அந்தக் கலவையை வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் நீங்கள் போட்டு வந்தால் கட்டாயம் விரைவில் வெண் புள்ளிகள் மறையும்.

மேலும் அனைத்து விதமான சருமப் பிரச்சனையை தீர்க்கக்கூடிய சக்தி வேப்பிலைக்கு உள்ளதால் அந்த வேப்பிலையை தனியாக பறித்து அரைத்து நீங்கள் வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு பிறகு குளிக்கலாம்.

 துளசிக்கும் நுண்கிருமிகளை எதிர்க்கக்கூடிய ஆற்றல் இருப்பதால் துளசியை விழுதாக அரைத்து அந்த விழுதினை நீங்கள் உள்ளுக்கு தேனில் குழைத்து சாப்பிடவும் செய்யலாம். அத்தோடு வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்த்து விட்டு பிறகு குளிக்கலாம்.

 சருமத்திற்கு மிக நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடிய குப்பைமேனி இலைச்சாறுடன் சிட்டிகை அளவு சுண்ணாம்பு, கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து அந்த கலவையை வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நிச்சயமாக அந்த வெண் புள்ளிகள் மறைவதோடு திட்டுக்களாக இருந்தால் அது மங்கி உடலின் நிறத்திற்கு ஏற்ப மாற்றத்தை கொடுக்கும்.

 இதுபோலவே மருதாணி இலையையும், ஆவாரம் பூவையும் சேர்த்து சாறு பிழிந்து எடுத்து வெண்புள்ளி திட்டுகள் மீது தடவி வந்தால் சரும ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி  வெண்புள்ளிகளை மறைக்க உதவி செய்யும்.

இது மட்டுமல்ல பச்சை மஞ்சளை அரைத்து வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் ஆரம்ப நிலைகளில் தேய்த்து விட மிக எளிதில் குணமாகும்.

மேற்குரிய எந்த பொருட்களை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெண் புள்ளிகள் இருந்து விடுதலைப் பெற முடியும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …