இயற்கையான முறையில் கோல்டன் ஃபேஷியல்

பெண்கள் முகத்தில் ஃபேசியல் மசாஜை செய்து கொள்ள நிறைய செலவுகள் செய்கிறார்கள். இதனை ஒரு முறை செய்தால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களின் மத்தியில் இருக்கிறது. எனவே வீட்டிலேயே மிக அழகான முறையில் கோல்டன் பேஷியல் செய்வது எப்படி என்பதை  பார்க்கலாம். 

உங்க முகம் தகதகவென்று தங்கம் போல மின்ன… 

தேவையான பொருட்கள் 

  1. கோதுமை மாவு 
  2. முல்தானி மெட்டி
  3. ஆரஞ்சுப்பழம் 
  4. அலோ வேரா ஜெல் 
  5. பஞ்சு அல்லது பருத்தித் துணி  
  6. நீர்

குறிப்பு

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முல்தானி மெட்டி.

வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கோதுமை மாவு 

கோல்டன் பேஷியல் செய்ய முதலில் ஆரஞ்சு பழத்தை எலுமிச்சம்பழம் நறுக்குவது போல் இரண்டாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

கற்றாழையில் ஜெல் உள்ள பகுதியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் வெந்நீரில் காட்டன் துணி அல்லது பஞ்சை நனைத்து முகம் முழுவதும் ஒற்றி எடுக்க வேண்டும்.

இதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்கு நீங்கிவிடும். கோல்டன் பேஷியல் பேக்  நீண்டகாலம் முகத்தை பொலிவோடு வைப்பதற்கு இது உதவும்.

அரைத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தை முல்தானிமெட்டி அல்லது கோதுமை மாவில் முக்கி எடுங்கள் அல்லது அதன் மீது தூவுங்கள். 

இதன் பின் இதனை ஆரஞ்சு படத்தின் பாதியில் அப்படியே முகத்தில் வைத்து மெல்ல தேய்க்க வேண்டும் முகம் முழுவதும் நன்கு படும்படி மிகவும் நேர்த்தியான வண்ணம் தேய்க்க வேண்டும் அல்லது தடவ வேண்டும். 

முகம் முழுவதும் நன்றாக படும்படி தடவி ஆரஞ்சு சாறு மாவும் ஒன்றிணைந்து முகத்தில் தேய்க்க வேண்டும். அதன் பின் 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். 

இறுதியாக கற்றாழை ஜெல் அரை ஸ்பூன் எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு 10 முதல் 15 துளி சேர்க்க வேண்டும். இதனை ஸ்பூனால் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 

சுமார் 10 நிமிடம் மசாஜ் செய்த பின் முகத்தை கழுவி துணியால் ஒற்றி எடுக்க வேண்டும்.

கோல்டன் பேஸியல் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள் 

  1. மஞ்சள் தூள் 2 ஸ்பூன் 
  2. கிரிக் யோகர்ட் அரை கப்
  3. தேன் ஒரு ஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு
  5.  தேங்காய் எண்ணெய்

யோகார்ட் டை தனியாக முட்டையை அடிப்பதுபோல் அடித்துக் கலக்க வேண்டும். பின் மஞ்சளை துருவி பொடியாக்கி இதனுடன் சேர்க்க வேண்டும்.  பின்னர் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து பிளேன்ட் செய்யவும். 

இந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து நன்றாக காய்ந்ததும் உரித்து எடுக்க வேண்டும் இப்போது உங்கள் முகம் பார்ப்பதற்கு மிகவும் பரபரப்பாக இருக்கும் வாரம் ஒருமுறை மட்டும் இதனை செய்து வந்தால் எப்படிப்பட்ட முகமும் மிகவும் மிருதுவாகவும் வழவழப்பாகவும் மாறி தங்க நிறத்தில் ஜொலி ஜொலிக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …