உடல் எடை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க..! – செம்ம டேஸ்ட்..! – ஒரே மாதத்தில் நல்ல ரிசல்சட்..!

உடல் எடை குறைக்க : இன்று இளம் வயதினரும் அதிகளவு உடல் எடையால் அவதி பட காரணம் நமது பாரம்பரிய உணவுகளை தவிர்த்து மேற்கத்திய உறவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுக்கு ஏற்ற அளவு உடல் உழைப்பும் இல்லாததுதான்.

 அந்த வரிசையில் முன்னோர்கள் பயன்படுத்திய கொள்ளு இன்று பெரும்பாலான வீட்டில் பயன்பாட்டில் இல்லை என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம் தான். இந்தக் கொள்ளு கொண்டு ஹெல்த்தியான ரெசிபி கொள்ளு அடை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

 கொள்ளு அடை செய்ய தேவையான பொருட்கள்

1.இட்லி அரிசி அரை கிலோ

2.100 கிராம் துவரம் பருப்பு

3.50 கிராம் முழு கருப்பு உளுந்து

4.150 கிராம் கொள்ளு

5.ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம்

6.ஐந்து வரமிளகாய் ஆறு

7.குறுமிளகு 5 முதல் 8

8.பொடியாக நறுக்கிய வெங்காயம்

9.சிறிதளவு தேவையான அளவு உப்பு

10.கருகேப்பிலை ஒரு கைப்பிடி அளவு

11.பெருங்காயத்தூள்

12.சிறிதளவு  நெய்

13.அடையை சுட்டு எடுக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய்.

 செய்முறை

முதலில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் குறைந்தது இரண்டு முதல் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

 இதனை அடுத்து நன்கு இந்த கலவையை கழுவி விட்டு மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு கோர கோர என்று அரைத்துக் கொள்ள வேண்டும்.மிகவும் நைசாக அரைக்க கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

 கோர கோர என்று அரைத்து வைத்திருக்கும் மாவுக்கு தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும். இதனை அடுத்து பொடி பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சிறிதளவு அடை மாவில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கைப்பிடி அளவு எடுத்து வைத்திருக்கும் கருவேப்பிலையை பொடி பொடியாக நறுக்கி அதே மாவில் போட்டு கலந்து கொள்ளுங்கள். இதனை அடுத்து அடுப்பில் தோசை கல்லை போட்டு கல் சூடான பிறகு அடை மாவை அப்படியே தோசையாக வார்க்கவும்.

மேலும் அடை நடுவில் ஒரு சிறிய குழியை ஒன்று செய்து அதில் சிறிதளவு நெய்யை விட்டு ஓரங்களில் தேங்காய் எண்ணெயில் விட்டு வேகவிடவும்.

 இப்போது சுவையான உடல் எடையை குறைக்க உதவும் கூடிய ஹெல்தி கொள்ளு அடை ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம். தேவை எனில் வெங்காய புளி சட்னி உடன் சாப்பிடும் போது சூப்பராக இருக்கும் நீங்களும் உங்கள் வீட்டில் எந்த அடைய செய்து அசத்துங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version